காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தை அகற்றக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை நீக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் இன்று மதியம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமானது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை திறப்பதற்கு இதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த அலுவலகத்தின் பணிகள் கடந்த மாத இறுதியில் ஆரம்பமானது.

Share:

Author: theneeweb