14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்

எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிக்க எதிர்பார்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜனநாயக தினம் இன்று (16) இரத்தினபுரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரும்பாலும் இன்றைய தினத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb