எவரும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் அதற்கான உரிமை உண்டு

நீதித் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்னர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமக்கு அது கிடைக்கவில்லை என தெரிவித்து எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அவர்கள் இலவச கல்வியின் மூலம் உருவாகியவர்கள் என்பதை மறந்துவிட்டதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரல கூறினார்.

பாலாங்கொடை, மெத்தேகந்த வித்யாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு வைத்தியர்களை போன்று தனிப்டட வகையில் பணம் சம்பாதிக்க முடியாது என அமைச்சர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தில் எவரெனும் ஒருவருக்கு அல்லது தரப்பினருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துதற்கான உரிமையுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ´சப்ரகமுவ மருத்துவ பீடம் திறக்கப்பட்டபோது, இரத்தினபுரி வைத்தியசாலையின் இரு கனிஷ்ட ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொண்டனர். அரசியல்வாதிகள் என்ற வகையில் சரியானதை நாம் செய்ய வேண்டும் காரணம் இந்த பதவியில் நாம் நீண்ட காலம் நீடிக்க பேவதில்லை.

நான் நீதி அமைச்சரான 15 ஆண்டுகளின் பின்னரே தெரிவானேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் இன்று நாட்டில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. நீதிதுறை அனைவருக்கும் சமமானதாக உள்ளது. தற்போது நீதித்துறைக்கு மட்டுமே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறைகூற ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் இலவச கல்வியின் மூலம் உருவாகியவர்கள் என்பதை மறந்துவிட்டதாக அவர் கூறினார்.

நீதிதுறையில் உள்ளவர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை, குறைந்தது தொலைபேசி வசதிகளும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பொது மக்களின் பணத்தில் படித்தர்கள் இன்று போராட்டங்களை நடத்துகின்றனர். வாகன அனுமதி பத்திரங்கள் உள்ளிட்டவைகளை கேட்கின்றனர். அவர்கள் தனியாக பிரத்தியேக சிகிச்சை நிலையங்களை நடத்தி நாளொன்றுக்கு குறைந்தது இருபதாயிரம் ரூபா வரையில் உழைக்கின்றனர்.

எவரும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் அதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியில் போன்று ஆர்பாட்டம் நடத்தினால் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. கொலை செய்யப் போவதில்லை. அன்று தண்ணீர் கேட்டவர்களை கொலை செய்தனர்´ என்றார்.

Share:

Author: theneeweb