இனப்பகைஒருநோய்தான் ! -எழுத்தாளர் – ஊடகவியலாளர்முருகபூபதி The Catamaranஇணையஇதழுக்குவழங்கியநேர்காணல்:

நோய்க்குமூவினத்தவரும்சேர்ந்துசிகிச்சைசெய்யவேண்டும் !!

 புலம்பெயர்ந்துசென்றவர்கள்மேலும்மேலும்கோயில்களைகட்டுவதற்கும்புனருத்தரணம்செய்துகும்பாபிஷகம்நடத்துவதற்கும்தான்பணத்தைவிரையம்செய்துகொண்டிருக்கிறார்கள் !!!

 எங்கள்நாட்டில்அரசியல்கட்சிகளும்பெருகிவிட்டன–  அதனாலும்நாட்டில்சமாதானத்திற்கானசாத்தியங்களும்குறைந்தகாலஎல்லையும்நீடித்துக்கொண்டிருக்கின்றது!!!!

 படைப்பிலக்கியவாதியும்ஊடகவியலாளருமானமுருகபூபதிஇலங்கையில்நீர்கொழும்பைச்சேர்ந்தவர். தற்போதுஅவுஸ்திரேலியாவில்வசிக்கிறார்.

அவுஸ்திரேலியாவிலும்இலங்கையிலும்அனைத்துச்சமூகத்தினரையும்இணைத்துஇலக்கியஅரங்குகளையும்நிகழ்த்திவருகிறார். தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களமக்களிடத்திலும்எழுத்தாளர்களிடத்திலும்இவருக்குநெருக்கமானஉறவுண்டு.இனஐக்கியத்தையும்சமாதானத்தையும்வலியுறுத்திஅதிகமானசிறுகதைகளும்நாவலும்எழுதியுள்ளார். தமிழ்- சிங்களமொழிப்புலமையுள்ளவர். இவரதுசிறுகதைகளில்சில‘மதக்கசெவனெலி’ (SHADOWS OF MEMORIES)என்றபெயரில்சிங்களத்தில்வெளிவந்துள்ளது. இலங்கையில்உள்ளபாதிக்கப்பட்டமாணவர்களின்கல்விவளர்ச்சிக்கு‘இலங்கைமாணவர்கல்விநிதியம்’ என்றஅமைப்பைஉருவாக்கிஅதன்வழியாகஉதவிகளைச்செய்துவருகிறார்.

இந்தநேர்காணலில்தன்னுடையஅவதானங்களையும்அனுபவங்களையும்முன்னிறுத்திஇலங்கையின்எதிர்காலத்துக்கானபங்களிப்புகளைப்பற்றிப்பேசுகிறார்.

The Catamaranஇணையஇதழுக்காகமுருகபூபதிவழங்கியநேர்காணல்:

த கட்டுமரன்:இலங்கைச்சமூகங்கள்யுத்தத்திற்குப்பிறகு,

நாட்டினுள்எப்படிச்செயற்பட்டிருக்கவேண்டும்?

முருகபூபதி:ஒருபுறம்முஸ்லிம்களின்ஆதரவு, மற்றும்ஒருபுறம்கிழக்குமக்களின்அபிமானம், இடையில்மலையகமக்களின்அனுசரணை, ஆகியஅனைத்தையும்வடக்கின்தமிழர்தரப்புதலைமைகள்படிப்படியாகஇழந்துவிட்டுதமிழ்த்தேசியம்பேசிக்கொண்டிருக்கிருக்கின்றன.
இந்தப்பக்கம், நீடித்தமுப்பதுஆண்டுகாலப்போரில்வெற்றிவாகைசூடியதாகமார்தட்டிக்கொண்டமுன்னாள்அதிபர்மகிந்தராஜபக்க்ஷஎன்னசொன்னார்?
“இனிமேல்இந்தநாட்டில்சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிம்களோஎன்றபாகுபாடுஇல்லை! அனைவரும்இலங்கையரே!”ஆனால், போர்முடிந்துபத்துஆண்டுகளின்பின்னர், பௌத்ததுறவிகளையும்கடும்போக்காளர்களையும்இணைத்துக்கொண்டுள்ளஞானசாரதேரர், “இந்தநாடுபௌத்தசிங்களவருக்குமட்டுமேஉரியது!?”எனச்சொல்கிறார். இவைவெறும்சாதாரணநிகழ்வுகள்அல்ல. இனப்பிரச்சினைக்குத்தீர்வாகடட்லி – செல்வாஒப்பந்தம்வந்தபோதுஅதனைஎதிர்த்துஜே.ஆர். ஜெயவர்தனா, கண்டிதலதாமாளிகைநோக்கித்தான்பாதயாத்திரைதொடங்கினார். இறுதியில்அந்தஒப்பந்தம்கிழித்தெறியப்பட்டது!

முஸ்லிம்அமைச்சர்கள், ஆளுநர்கள்பதவிவிலகவேண்டும்என்றுஒருபௌத்தபிக்கு, உண்ணாவிரதம்இருந்துதனதுகோரிக்கையில்வெற்றிபெற்றதும்இந்ததலதாமாளிகையின்முன்றலில்இருந்துதான். மற்றும்ஒருபௌத்தபிக்கு, ‘இதுபௌத்தசிங்களவர்களின்நாடு’எனமார்தட்டுகிறார்.

நாடாளுமன்றத்திற்குதெரிவாகும், அனைத்துபௌத்தசிங்களத்தலைவர்களும்அந்தமாளிகைசென்றேபௌத்தஉயர்பீடங்களிடம்ஆசிபெற்றுவருகின்றனர்.ஆனால், நாடாளுமன்றில்இனங்கள்சார்ந்த- இனப்பிரச்சினைசார்ந்தஎந்தவொருசட்டமூலம்வந்தாலும், அதனைஅங்கீகரிப்பதில்இறுதிமுடிவைசொல்லும்அதிகாரம்அதேதலதாமாளிகையிடம்தான், அந்தபௌத்தஉயர்பீடங்களிடம்தான்இருக்கிறது! இலங்கையையார்ஆண்டாலென்ன..?இதுதான்எழுதப்படாதவிதி! இந்தப்பின்னணிகளைஇலங்கை, தமிழ், முஸ்லிம்தலைவர்கள்வடக்கு – கிழக்கு – மேற்கு – மலையகதமிழ்மக்கள்புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

இந்தஅனுபவங்களைத்தான்நீடித்தபோருக்குப்பின்னரும்இலங்கைசமூகங்கள், குறிப்பாகதமிழ்பேசும்சமூகங்கள்பெற்றுள்ளன. இதிலிருந்து, அடுத்தகட்டத்திற்குஎவ்வாறுபயணிக்கவேண்டும்என்றஒன்றிணைந்ததீர்மானத்திற்குவரவேண்டியவர்கள்தமிழ் – முஸ்லிம்தலைவர்கள்தான். அவர்களைஆதரிக்கும்இரண்டுசிறுபான்மைஇனமக்களிடமும்புரிந்துணர்வைஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அவர்கள்அதைசெய்யவில்லை.

நீடித்தமுப்பதுஆண்டுகாலப்போரிலிருந்துஇலங்கைபொருளாதாரம்மீண்டுஎழுவதற்கிடையில்இந்தஆண்டு, உயிர்த்தஞாயிறுசம்பவங்களால்மேலும்மேலும்இலங்கைபின்னடைவைசந்தித்திருக்கிறது. அதனால், இனிமேல்அனைத்துஇலங்கைசிறுபான்மைசமூகங்கள்மட்டுமல்லபெரும்பான்மைசமூகமும்எத்தகையதெரிவுக்குமுன்வரவேண்டும்என்பதைஅந்தமக்கள்தான்தீர்மானிக்கவேண்டும்.

த கட்டுமரன்:இதில்புலம்பெயர்ந்திருக்கும்இலங்கைச்சமூகங்கள்எத்தகையபங்காற்றியிருக்கலாம்என்றுஎண்ணுகிறீர்கள்?

முருகபூபதி:இலங்கைஅரசியலில், புலம்பெயர்ந்தஇலங்கைசமூகங்களின்பங்களிப்புமட்டுப்படுத்தப்பட்டளவில்தான்இருக்கும். வெளிநாடுகளில்நிரந்தரகுடியுரிமைபெற்றவர்களினால், இலங்கைஅரசியல்விவகாரங்களைகையாளமுடியாது. அதற்குஅங்குசட்டத்தில்இடமில்லை! அரசதரப்பிடம்வந்துபேச்சுவார்த்தைநடத்திஅழுத்தம்கொடுக்கமாத்திரமேமுடியும். இதுஅவ்வப்போதுநடந்துவருகிறது. ஆனால், அனைத்தும்செவிடன்காதில்ஊதியசங்கொலிதான். வெளிநாடுகளில்பலஎழுத்தாளர்கள்இலங்கைஎதிர்நோக்கும்நெருக்கடிகள்குறித்துதங்கள்கருத்துக்களைபதிவுசெய்துவருகிறார்கள்.

அவுஸ்திரேலியாவில்மாத்திரம்ஐந்திற்கும்மேற்பட்டசிங்களஇதழ்கள்வெளிவருகின்றன. ஆனால், சமகாலத்தில்ஒரேஒருதமிழ்மாதஇதழ்( எதிரொலி) மாத்திரமேவெளிவருகிறது. சிங்களமக்களும்தங்கள்பிரதேசத்துஏழைமக்களுக்காகவும்இராணுவத்தில்இணைந்துபோரில்கொல்லப்பட்டவர்களின்குடும்பங்களின்வாழ்வாதாரத்திற்கும்இங்கிருந்துஉதவிவருகின்றனர். இலங்கையில்இனப்பகைமுற்றும்சந்தர்ப்பங்களில்புகலிடத்தில்வாழும்மனிதநேய – மனிதஉரிமைஆர்வலர்கள்கருத்தரங்குகளைநடத்திவருகின்றனர். இதுஅவர்களுக்குதங்கள்தாயகம்மீதானபற்றுதலைகாண்பித்தாலும், இலங்கையிலிருக்கும்கடும்போக்காளர்களின்சிந்தனையில்மாற்றம்எதனையும்இங்கிருப்பவர்களால்ஏற்படுத்தமுடியவில்லைஎன்பதுதான்உண்மை.

த கட்டுமரன்:மேலும்மேலும்இனப்பகைமைவலுப்பெற்றுச்

செல்வதற்கானகாரணமென்ன?

முருகபூபதி :இனப்பகைஇருந்தால்தான்தாங்கள்பதவிகளில்இருக்கமுடியும்என்றுநம்புபவர்கள்உள்ளதேசம்தான்இலங்கை. இனப்பகைதேசத்தின்பொருளாதாரவளங்களைசூறையாடிவிடும்எனத்தெரிந்தும், இனப்பகையைமூட்டக்கூடியசட்டங்களைத்தான்நடைமுறையில்வைத்துள்ளனர். இனமுரண்பாடுகள்தான்நிரந்தரஇனப்பகையாகமாறுகிறது.
இலங்கை1915 ஆம்ஆண்டுமுதல்காலத்துக்குக்காலம்இனநெருக்கடிக்கலவரங்களைசந்தித்துள்ளது. இனநல்லிணக்கம்என்றுபேசிப்பேசியேவந்தாலும்நடைமுறையில்எதுவும்இல்லை. சட்டமும்ஒழுங்கும்சீர்குலைந்தமையினால்தானே, அவசரகாலச்சட்டம், ஊரடங்குச்சட்டம்அமுலில்இருக்கும்வேளைகளில்சிறுபான்மையினரின்சொத்துக்கள்தீயிட்டுஅழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. இதுவரையில்அதற்காகயாராவதுசட்டத்தின்முன்னால்தண்டிக்கப்பட்டார்களா? அரசியல்வாதிகளும்இனவாத – மதவாதசிந்தனைகொண்டவர்களும்தொடர்ந்தும்இனப்பகையைஊட்டும்பேச்சுக்களைத்தானேபேசிவருகிறார்கள்.

த கட்டுமரன்:இந்தப்பிரச்சினையைத்தீர்ப்பதற்குஎந்தவகையில்வெளிநாட்டுச்சக்திகளைப்பயன்படுத்தலாம்? கையாளலாம்?

முருகபூபதி: வெளிநாட்டுச்சக்திகள்ஆதாயம்இல்லாமல்இன்னொருநாட்டின்உள்நாட்டுப்பிரச்சினையில்தலையிடாது! இலங்கை, தென்கிழக்காசியாவுக்கே, தலைமைதாங்கஎத்தனிக்கும்இந்தியாவின்அயல்நாடு. 2009 ஆம்ஆண்டில்முள்ளிவாய்க்கால்பேரவலம்நடந்தபோது, இந்தியாவைமீறிஎந்தவொருநாடும்போருக்குள்சிக்குண்டிருந்தமக்களைபாதுகாக்கமுன்வரவில்லை. அதனால்தான், “அந்தப்போரைமுன்னின்றுநடத்தியதுஇந்தியாதான்” என்றுதுணிச்சலுடன்முன்னாள்அதிபர்சொன்னார்.

போர்முடிவுக்குவந்தபின்னர், இலங்கையில்இரண்டுஅதிபர்தேர்தல்கள்நடந்துவிட்டன. அரசுகளும்மாறின. வெளிநாட்டுச்சக்திகள்இக்காலப்பகுதியில்; இலங்கையில்நன்றாககாலூன்றிவிட்டன. வெளிநாட்டுச்சக்திகளுக்குஇலங்கைஒருசுண்டக்காய்நாடு. ஆட்சிபீடம்ஏறுபவர்களைஎவ்வாறுகையாளவேண்டும்என்பதுஅவற்றுக்குத்தெரியும். இலங்கை – இந்தியஒப்பந்தத்தில்இரண்டுதலைவர்கள்கைச்சாத்திட்டனர். அந்தஒப்பந்தத்திற்குஇறுதியில்என்னநடந்தது? இந்தியாவின்ஆதிக்கம்அதன்ஊடாகசெறிந்துவிடும்என்பதால், அதனைவிரும்பாதசிலவெளிநாட்டுசக்திகள்மறைமுகமாகதலையிட்டுதொடர்ந்தும்இலங்கையைக்கொதிநிலையில்வைத்திருந்தன. இலங்கையில்இனப்பிரச்சினைக்குத்தீர்வாகஎந்தவொருஅர்த்தமுள்ளஅனைத்துமூவினங்களும்ஏற்கக்கூடியதீர்வுவந்தாலும், அதில்தனதுநாட்டுக்குஎன்னஆதாயம்இருக்கிறது…? என்றுதான்அந்தவெளிநாட்டுசக்திகள்பார்க்கும். இதுதெளிவானது. எனவேஇலங்கைஇனமுரண்பாட்டில்இன்னமும்பூகோளஅரசியலைத்தான்(Geo politics-especially in trinational relations as influenced by geographical factors) தனதுவகிபாகமாகவைத்துள்ளன.

த கட்டுமரன்:அப்படியென்றால்அரசியல்தலைமைகள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகத்துறையினர்மற்றும்சமூக

செயற்பாட்டியக்கங்கள்போன்றதரப்புகள்எவ்வாறான

செயற்பாடுகளைமேற்கொண்டிருக்கலாம்?

முருகபூபதி:தொடர்பாடல்தான்அவசியமானது. தொடர்பாடல்அற்றுப்போனசமூகம்உருப்படாது! நீங்கள்குறிப்பிடுகின்றவர்கள்இனப்பகைமுற்றும்தருணங்களில், அதனைத்தணிக்கதம்மாலானதைசெய்துவந்தாலும், சட்டமும்ஒழுங்கும்ஆரோக்கியமாகநீதியின்பாற்பட்டிருக்கவேண்டும். நாம்1974இல்தேசியஒருமைப்பாடுமாநாடுநடத்தினோம். 1977இல்கலவரம்வந்தது. தென்னிலங்கையில்தமிழர்கள்அகதிகளாககப்பலேறிகாங்கேசன்துறையில்இறங்கினார்கள். அப்போதுநீங்கள்சொல்லும்தரப்புகள்ஒருமுனையிலும்- இனவாதகடும்போக்காளர்கள்மறுமுனையிலும்தான்நிற்கிறார்கள். இதுவரையில்இலங்கையில்இனக்கலவரத்தைதூண்டியவர்களுக்கு, கொலை, கொள்ளைகளில்ஈடுபட்டவர்களுக்குசட்டம்என்னசெய்தது? அந்ததீயசக்திகளின்பின்னால்அரசியல்வாதிகள்தான்நிற்கிறார்கள். எனினும்நல்லெண்ணசக்திகள்தொடர்ந்துதம்மாலியன்றதைசெய்துதான்வருகின்றன.

த கட்டுமரன்:இனப்பிரச்சினைத்தீர்வுக்கானஅக – புறச்சூழலைஉருவாக்குவதில்கலை, இலக்கியத்துறைப்பங்களிப்புகள்எப்படியானதாகஇருக்கவேண்டும்?

முருகபூபதி:மொழிப்பரிவர்த்தனைமிகமுக்கியமானது. இலங்கையில்இரண்டுமொழிகள்தான்பிரதானமானது. ஆங்கிலம்ஒருதுணைமொழி. அடிக்கடிஇலங்கைஎங்கும்தமிழ் – சிங்கள – முஸ்லிம்எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின்சந்திப்புகள், கலந்துரையாடல்கள்நடைபெறவேண்டும். முன்னர், வடக்கிலிருந்துதெற்கிற்கும்தெற்கிலிருந்துவடக்கிற்கும்அவர்கள்பயணித்து, சந்தித்துபேசியிருக்கிறார்கள். இச்சந்திப்புகளைஇலங்கையில்இருக்கும்ஒன்பதுமாகாணசபைகளும்முன்னின்றுநடத்தவேண்டும். இனங்களிடையேபுரிந்துணர்வைஏற்படுத்தும்வேலைத்திட்டங்களைஅந்தசந்திப்புகளில்பரிந்துரைத்து, ஒருங்கிணைக்கலாம். அத்துடன்கல்லூரிகள், பாடசாலைகளின்மட்டத்தில்உயர்தரவகுப்புமாணவர்கள்மத்தியில்தமிழ் – சிங்களகலைஇலக்கியங்களைஅறிமுகப்படுத்தி, இனங்களின்உணர்வுகளைவெளிப்படுத்தலாம். அதனால், கலாசாரபண்பாட்டுவிழுமியங்களைபரஸ்பரம்புரிந்துகொள்ளஏதுவாகஇருக்கும்.
பல்கலைக்கழகங்களில்கற்கும்மாணவர்கள்இன, மத, மொழிரீதியாகசிந்திக்காமல், நாம்அனைவரும்இலங்கையர்என்றமனோபாவத்துடன், சர்வதேசஅரங்கில்நல்லகீர்த்தியைபெற்றுக்கொடுக்கமுன்வரல்வேண்டும். அதற்குமுன்னர்அங்கிருக்கும்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிடம்இதுபற்றியபிரக்ஞையைஏற்படுத்தல்வேண்டும்.

த கட்டுமரன்:உண்மையில்நாட்டில்நல்லிணக்கவாழ்வுக்கானசாத்தியங்களும்காலஎல்லையும்எப்படியிருக்கும்?

முருகபூபதி:எங்கள்தேசம்கடக்கவேண்டியதூரம்அதிகம். ஆனால், கடக்கத்தான்வேண்டும். எளிதாகக்கடக்கமுடியும். இந்தியாபோன்றுபலஇனங்கள்வாழும்நாடல்லஇலங்கை. வற்றாதஜீவநதிகள்ஓடும்அழகியதேசம். மூன்றுஇனங்கள்வாழ்ந்தாலும், இரண்டுமொழிகளைத்தான்பிரதானமாகபேசுகிறார்கள். எனதுபலசிறுகதைகளில்இனஐக்கியத்தையும்நல்லிணக்கத்தையும்வலியுறுத்தியிருக்கின்றேன். அத்தகைசிலகதைகள்தேர்ந்தெடுக்கப்பட்டு ‘மதக்கசெவனெலி’ (SHADOWS OF MEMORIES) என்றபெயரில்சிங்களத்தில்வெளிவந்துள்ளது.

இதனை ,என்னிடம்தமிழ்கற்றதமிழ்அபிமானிஅமரர்வண.ரத்னவன்ஸதேரர்அவர்களுக்கேசமர்ப்பித்துள்ளேன். அந்தநூலின்அறிமுகஅரங்குஅவர்வாழ்ந்தசிங்களப்பிரதேசமானமினுவாங்கொடையில்கொரஸஎன்றகிராமத்தில்நடந்தபோதுசிங்களமக்கள்திரளாகவந்திருந்தார்கள். சிங்களவாசகர்கள்உரையாற்றினார்கள். தொடர்ச்சியாகசிங்கள – முஸ்லிம்இலக்கியவாதிகளுடன்உறவாடிவருகின்றேன். நான்வதியும்அவுஸ்திரேலியாவிலும்இவ்வாறுதொடர்பாடல்களைமூவினத்தவருடனும்பேணிவருகின்றேன்.

உங்களுக்குஒருசுவாரசியமானதகவல்சொல்லத்தான்வேண்டும். நான்நீண்டகாலமாகஇதயநோயாளி. அத்துடன்இன்சுலின்ஏற்றும்நீண்டகாலநீரிழிவுஉபாதையுடன்காலத்தைநகர்த்திவருகின்றேன். அதனால்பலபக்கவிளைவுகளுக்கும்சிகிச்சைபெற்றுவருகின்றேன்.எனதுகுடும்பமருத்துவர்பங்களாதேசத்தின்முஸ்லிம்ஒருவர். எனக்குசிகிச்சையளிக்கும்மருத்துவநிபுணர்இலங்கையைச்சேர்ந்தசிங்களவர். நான்தமிழன். இதிலிருந்துஎன்னபுரிகிறது?

நோய்க்குஅரசியல் – மொழி – இனம் – சாதிஇல்லை. எந்தநோயும்எவருக்கும்வரலாம். நோயாளியைபராமரிக்கும்மருத்துவர்களிடத்திலும்இன, மத, மொழி, சாதிவேறுபாடுகளைகாணமுடியாது. அவ்வாறுதான்அந்தப்புனிதமானதொழிலுக்குதேர்ச்சிபெறும்போதுசத்தியப்பிரமாணம்எடுக்கின்றனர். இலங்கையிலும்இனப்பகைஒருநோய்தான். அதுமுற்றியிருக்கிறது. அதற்குமூவினத்தவரும்இணைந்துதான்சிகிச்சைசெய்யவேண்டும்.

காலஎல்லைபற்றியும்கேட்டிருக்கிறீர்கள். அன்றாடம்அவுஸ்திரேலியாவில்இருந்துஇலங்கைச்செய்திகளையும்நாட்டுநடப்புகளையும்அவதானித்துவருகின்றேன். போகிறபோக்கைப்பார்த்தால், நாம்கடக்கவேண்டியதூரம்இன்னும்அதிகம்தான்.

இலங்கையில்பலபிரதேசங்களில்இன்றும்மக்கள்மண்குடிசைகளில்வாழ்ந்தவாறுமலகூடவசதிகளும்அற்றிருக்கின்றனர். உயிரோடுவாழும்அம்மக்கள்அப்படிஇருக்கையில், உயிரற்றசிலைகளுக்குஇன்னும்தான்இருப்பிடங்கள்அமைப்பதற்குஆட்சியாளர்கள்எத்தனிக்கிறார்கள். புலம்பெயர்ந்துசென்றவர்களும்மேலும்மேலும்கோயில்களைகட்டுவதற்கும்புனருத்தாரணம்செய்துகும்பாபிஷேகம்நடத்துவதற்கும்தான்பணத்தைவிரையம்செய்துகொண்டிருக்கிறார்கள்.

எங்கள்நாட்டில்அரசியல்கட்சிகளும்பெருகிவிட்டன. அதனாலும்நாட்டில்சமாதானத்துக்கானசாத்தியங்களும்குறைந்துகாலஎல்லையும்நீடித்துக்கொண்டிருக்கிறது. வடபிரதேசத்தில்மாத்திரம்பதினைந்திற்கும்மேற்பட்டதமிழ்அரசியல்கட்சிகள்என்றுசமீபத்தில்எனதுபதிவொன்றில்எழுதியிருந்தேன்.

தென்னிலங்கையும்இதுவிடயத்தில்சளைத்ததுஅல்ல! அஸ்தமனத்திலிருந்துஉதயத்தைகாணத்தான்விரும்புகின்றோம்! ஆனால், எங்கள்தேசம், அஸ்தமனத்தைநோக்கிச்செல்லும்பாதையில்தான்செல்கிறது. அதற்குஆட்சியாளர்கள்தான்காரணம்!!

—0—

நன்றி:www.thecatamaran.org

Share:

Author: theneeweb