யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் செழிப்பான கிளிநொச்சி நோக்கி ஆய்வும் முன்மொழிவும்

செழிப்பான கிளிநொச்சியை நோக்கி ஆய்வும் முன்மொழிவும்  செயலமர்வு யாழ் பல்கலைகழகம் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்கால  கிளிநொச்சியை கட்டியெழுப்பும் நோக்கில் செயலமர்வு துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சிந்தனைக்களம் கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்  கட்டளையும் இணைந்து  கிளி. மாவட்ட மக்கள் அமைப்பின்              (லண்டன்) நிதி பங்களிப்பில்  யாழ் பல்கலைககழகம் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கடந்த 15-09-2019 அன்று நடாத்திய செழிப்பான கிளிநொச்சியை நோக்கி ஆய்வும் முன்மொழிவும் செயலமர்வு இடம்பெற்றது.

இச் செயலமர்வில் சுமார் நூறு வரையான பல்வேறு துறைசார்ந்தவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இதன் போது

செழிப்பான கிளிநொச்சி மாவட்டத்தை எதிர்காலத்தில் ஆக்கும் வழிக்காக சிந்திக்கும் மாந்தர் குளாத்தின் அறிவு ஆற்றல் மனப்பாங்கின் திரட்சியாக நிபுணத்துவ ஆளுமைகளின் பங்களிப்போடு இந்த மாவட்டத்தின் வருங்காலத்தையும் மக்கள் வாழ்க்கையையும் சரிநிகராக செழிப்பாக்க வேண்டிய தேவை வடக்கில் வாழும் இன்றுள்ள மாந்தர்களின் பாரிய பொறுப்பு. அந்தவகையில்

நகராக்கம்

இயற்கை வளங்களை பாதுகாத்தல் மூலப்பொருட்களை இங்குள்ள தொழில் விருத்திக்காக இணக்குதல்

உற்பத்திப்பொருட்களுக்கும

வளங்களுக்கும் பெறுமதி சேர்த்தல்

புதிய தொழில் முயற்சிகளை கண்டு பிடித்தல்

கல்வி சுகாதாரம் கலாசார வடிவங்களில் உச்சமான வெற்றிக்கும் செழுமைக்கும் நவீன மற்றும் பாரம்பரியங்களின் பொருத்தப்பாட்டை தேடுதலும் தக்கவைத்தலும்

தொன்மங்களை காப்பாற்றுதலும் அதற்கு பெறுமதி சேர்த்தலும்

இந்த மாவட்டத்தின் வளங்களை சுறண்டாது தடுத்தலும்

பாடுபடும். வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலும்

பண்புத்தரத்தை உயர்த்துதலும் வேலை இல்லாமையை ஒழித்தலும்

உளநெருக்கடிகளை வறுமையை போக்குதலும் கல்வி வழங்கலில் பண்புத்தரத்தை உயர்த்துதலும்

மருத்துவ சேவையின் பண்புத்தரத்தை உயர்த்துதல் புதிய கலை அனுபவங்களை புதிய கண்டு பிடிப்பாளர்களையும் அறிவியல் பேட்டைகளையும் சிறந்த விழுமியம் மிக்க தொழில் பண்பாட்டையும் விழுமியம் மிக்க பொழுதுபோக்கு வாய்ப்புகளையும் ஏற்படுத்தல் என்ற பல்வேறு நோக்கங்களை அடையும் ஆரம்பமாக

இந்த மக்கள் சிந்தனைகளம் தனது செயல்ப்போக்கை விரிவுபடுத்த விளையும் ஒரு மதிப்பீடாக பொறியியல் பீடத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் கருத்துக்களமும் முளை கொண்டன பிறருக்காக சிந்திக்கும் மாந்தர்களின் ஒரு தொகுதியின் சங்கமமாக இது வடிவம் கொண்டது இதன் பரிமாணங்கள் அடுத்த நிலைக்கு அறிஞர்களால் அதிகாரம் பெற்றவர்களால் நிதி வளங்குபவர்களால் சட்டமாக்குபவர்களால் முன்னெடுக்க வைக்கப்படும்

 இச் செயலமர்வில் யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜாஇ யாழ் வைத்தியசாலைப் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் கல்வி வளர்ச்சிக் அற்க் கட்ளையின் தலைவருமான மருத்துவர் த. சத்தியமூர்த்திஇ வடமாகாண அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர் செல்வின் இரேனியஸ்இ விரிவுரையாளர் கலாநிதி சு. சிவகுமார்இ விவசாய ஆராச்சி உதவிப் பணிப்பாளர் கலாநிதி ளு.து. அரசகேசரி ஒய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேல் மற்றும் வைத்தியர்கள்இ பாடசாலை அதிபர்கள்இசட்டத்தரணிகள்இ விவசாயிகள்இ என மாவட்த்தைச் சேர்ந்த அனைத்து துறைசார்ந்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

Share:

Author: theneeweb