மீண்டும் தாயகம் திரும்புவதற்கு விரும்பும் அகதிகள்

தமிழகத்தின் மண்டபம் அகதிகள் சிலர், முகாமிலிருந்து மீண்டும் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கான மனுவொன்றை 45 குடும்பங்களைச் சேர்ந்த 146 அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகவர் அதிகாரிகளிடம் நேற்று கையளித்துள்ளனர்.

இலங்கையில் 1983 இல் ஆரம்பமான உள்நாட்டுப் யுத்தம் காரணமான இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு  அகதிகளளாக இலங்கைத் தமிழர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் 119 அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகவரகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 33,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாக பதிவு செய்து, வெளியிடங்களில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் அகதிகள் முகாமில் மாத்திரம் தற்போது 526 குடும்பங்களைச் சேர்ந்த 1,598 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb