பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் 70 வீதம் பூர்த்தியடைந்துள்ளன

பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் 70 வீதம் பூர்த்தியடைந்துள்ளன.

விமானநிலைய புனரமைப்புப் பணிகளின் முதற்கட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பணிகளில் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகளில் 55 வீதமானவை நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb