சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான தொடர்பு இரு நாடுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கும் வலுவூட்டுவதற்கும் சாதகமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் சபை உறுப்பினரும் சொங்ஜிங் (Chongqing) நகர கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான சென்மினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் சிலர் இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். இலங்கை மக்களுக்கு சீன மக்களின் நல்வாழ்த்துக்கள் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு வீதி ஒரு கரை என்ற வேலைத்திட்டத்தின் அங்கத்துவர் என்ற ரீதியில் இலங்கையின் பணிகளை பாராட்டி சென்மினர் கைத்தொழில் மற்றும் விவசாய தொழிற்துறை உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு செங்ஜிங் நகர நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சொங்ஜிங் (Chongqing) நகரம் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்புகளை வலுவூட்டுவது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. உலகளாவிய பொருளாதார வலு ஆசியாவை கேந்திரமாக கொண்டு இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்கால ஆசியாவின் சவால்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்து மா சமுத்திர வலயத்திற்கு அருகாமையில் உள்ள நாடுகளின் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தில் கூடுதலான வளர்ச்சி எடுத்துக் காட்டப் பட்டிருப்பதாகவும் இந்த வலயத்தில் உள்ள நாடுகளின் வர்த்தக தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்து மா சமுத்திர வலயத்தில் நிரந்தர சமாதானத்தை நிலை நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பொருளாதார வளர்ச்சி சமூக மற்றும் கலாசார மேம்பாடு, தனிநபர் தொடர்பு, உலகளாவிய ஸ்திரத்தன்மை ஆகிய துறைகளை வலுவூட்டுவது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை பிரசாரம் செய்தல் புதிய சவால்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கட்சி செயற்பாட்டாளர்களை பயிற்றுவித்தல், அங்கத்தவர்கள் மத்தியில் தனிப்பட்ட தொடர்புகளை வலுவூட்டுதல் ஆகிய பணிகள் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் இதன்போது சென்மினர் தெரிவித்தார்.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் காவிந்த ஜயவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் அத்தாவுத ஹெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share:

Author: theneeweb