தற்காலிக, பகுதி நேர ஊழியர்களை நிரந்தர சேவையில் இணைக்க தீர்மானம்

தற்காலிக நாள் சம்பள அடிப்படையில் Casual daily ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

அரசாங்க நிர்வாக சுற்றுநிருபம் 25/2014 மற்றும் 25/2014 (1) வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்ட தேவையை பூர்த்தி செய்யாததினால் சேவையின் ஸ்திரத்தன்மையைப் பெற்றுக் கொள்ளமுடியாத ஊழியர்களைப் போன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் சேவை தேவை அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்ப தரங்களுக்கு உட்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக நாள் சம்பளம் (Casual daily) ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு 180 நாட்களுக்கும் மேல் சேவையாற்றியுள்ள ஊழியர்கள் தேவையான தகுதிகளை 2019.09.01 தினத்திற்கு பூர்த்தி செய்யும் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்களுக்கு தேவையான தகுதி 2019.09.01 தினத்தன்று பூர்த்தி செய்யும் அடிப்படையில் அந்த பதவிகளில் நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனம் வழங்குவதற்காக சுற்றறிக்கைக்கான ஒதுக்கீட்டு நடைமுறையை மேற்கொள்வதற்காக பிரதமரும் நிதி அமைச்சரும் அரச நிர்வாக இடர் முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb