சித்திரவதைகளில் ஈடுபட்ட 58 பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்கள் வெளியீடு

இலங்கையில் சித்திரவதைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து, 58 பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்களை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான வேலைத்திட்டம் வெளியிட்டுள்ளது.

அதன் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 73 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலர்கள் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கைது செய்யப்படுகின்றவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்களால், 2007ம் ஆண்டும், ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் ஊடாக 2015 ஆம் ஆண்டும் அறிக்கைகள் வெளியாக்கப்பட்டுள்ள போதும், அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் யாஸ்மின் சூக்கா குற்றம் சுமத்தியுள்ளார்

Share:

Author: theneeweb