தற்போதைய அரசாங்கத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே தீர்த்துக் கொண்டனர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறிய மலையதத் தலைவர்கள் அதிலிருந்து வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் சிவரஞ்சனி சிவகுமாரன் இதனைத் தெரவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்கள், தற்போதைய அரசாங்கத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே தீர்த்துக் கொண்டதாக தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களான ரவிச்சந்திரன் மற்றும் சந்தரகுமார் ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

Share:

Author: theneeweb