ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு ஓய்வுதிய கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

விஷேட தேவையுடைய படை வீரர்களுக்கு சம்பளத்தில் 75 சதவீதத்தை ஓய்வூதிய பணமாக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த வாரம் அளவில் அமைச்சரவையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். விஷேட தேவையுடைய படை வீரர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரின் பிரச்சினை தொடர்பில் நான் கவனம் செலுத்தினேன். அவர்களது பிரச்சினையில் நியாயம் இருப்பதாக நான் அறிந்து கொண்டேன். முழு அளவில் ஊனமுற்றவர்களுக்கு முழுமையாகன ஓய்வூதியம் வழங்கப்படுகினறது. ஆனால் இவர்களுக்கு அவ்வாறு இல்லை. தோற்றத்தில் இவர்கள் ஊனமுற்றதாக காணப்படுவதில்லை. தோட்டாக்கள், வெடி பொருட் சிதறல்கள் இவர்கள் உடலில் காணப்படக்கூடும்.

இதனாலேயே அவர்களுக்கும் முழுமையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb