வெற்றி பெறும் கூட்டணி என்னிடம் உள்ளது

ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு பேச்சுவார்த்தை மேற்கொள்வது வெட்கக்கேடான செயல் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனை இதற்கு முன்னர் செய்திருக்கலாம் என தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான விடயம் தொடர்பில் பேசுவது குறித்து தன்னால் கற்பனை செய்வதேனும் கடினமாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வெற்றிப் பெறும் கூட்டணி என்னிடம் உள்ளதாக கூறிய அமைச்சர், அதற்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்பாடாது என தெரிவித்தார்.

Share:

Author: theneeweb