கோட்டாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்தில் போட்டியிடுவார்

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) முற்பகல் மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்று விகாராதிபதி வண.மெதிரகிரியே அஸ்ஸஜி தேரரை வழிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து அவர் சோமாவதி ரஜ மகா விகாரைக்கு சென்றிருந்தார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, சோமாவதி ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. பஹமுனே சுமங்கள தேரரை வழிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

பின்னர் , கோட்டாபய ராஜபக்ஷ திம்புலாகல ரஜமகா விகாரைக்கு சென்று விகாராதிபதி மில்லானே சிறியாலங்கார தேரரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து கந்துருவெல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார்.

பொலன்னறுவை புதிய நகரில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலன்னறுவை மாவட்ட கட்சி அலுவலகத்தை கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது திறந்து வைத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று பொலன்னறுவை மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்கேற்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

Share:

Author: theneeweb