முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதியில் படையினர் வசமுள்ள மக்களின் காணி விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதியில் படையினர் வசமுள்ள மக்களின் காணி விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்  தலைமையில்  ஆரம்பமாகியது. குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், படை அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், ஆளங்குளம் பகுதியில் காணி உரிமம் கோரும் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனினால் பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. நிறைவில் ஆளுநர் சுரேன் ராகவன், நாம உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, பொதுமக்கள் ஆகியுார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.
Share:

Author: theneeweb