கிளிநொச்சியில் பற்சுகாதார செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டம் முன்னெடுப்பு

 

கிளிநொச்சி கல்வி திணைக்களத்தின் கீழ் உள்ள தரம் ஒன்று மாணவர்களின் பற்சுகாதாரத்தை பேணும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன பற்சுகாதார செயற்றிடத்தின் மூன்றாவது கட்டம் இன்று(20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உலக சுகாதார மருத்துவ நலச் சங்கம் அணுசரனையில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயங்களில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தரம் ஒன்று மாணவர்களுக்கு பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், மற்றும் பாடசாலைகளில் நடமாடும் பற் சிகிசைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அந்த வகையில் இவ்வாண்டுக்கான மூன்றாவது பற்சுகாதார செயற்றிட்டத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பற்தூரிகை, பற்பசை என்பன இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 72 பாடசாலைகளின் ஆசிரியர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலநாதன் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயலாளர் சிறிகௌரிபாலா ஆகியோர் கலந்துகொண்டனர்

Share:

Author: theneeweb