இலஞ்சம் பெற்ற யாழ் அதிபர் விளக்கமறியலில்

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழின் பிரதான கல்லூரியின் அதிபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் திட்டமிட்டு அனுப்பபட்ட ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது இவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

அவரை யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், இன்று மாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதால் அதிபருக்கு சாதகமான நிலை ஏற்படும் என்ற காரணத்தால் சிறப்பு அனுமதியின் கீழ் பருத்தித்துறை பொலிஸ் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

Share:

Author: theneeweb