சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்துமாறு கோரி சத்தியாகிரகம் போராட்டம்

ஐக்கிய தேசிய கட்சியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தபட வேண்டுமென கோரி பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ் பிரிவில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று (20) காலையில் இருந்து சத்தியாகிரக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஏனைய பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் மாத்திரமே இழுப்பறி நிலை காணபட்டுள்ளது என சத்தியாகிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான தியாகராஜ கலைச்செல்வன் மற்றும் ஜெனாஸ்டர் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த நாட்டில் ஜனநாயகம் ஒன்று இல்லை எனவே இந்த நாட்டில் ஜனநாயகம் வேண்டும் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்று அமைச்சர் சஜித் பிரேமேதாஸவை தான் விரும்புகிறார்கள். ஆகவே தேசிய மக்கள் சபை ஒரு கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறது. ​

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தாவிட்டால் எங்கள் சத்தியாகிரக போராட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெறம் என குறிப்பிட்டனர்.

Share:

Author: theneeweb