ஆதரவு யாருக்கு – விரைவில் அறிவிக்கப்படும்

இந்நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் அமைதியுடனும் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ கூடிய சூழலை உருவாக்கும் நபருக்கு எமது ஆதரவை பெற்றுத் தருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பட்டானிச்சூர் பிரதேசத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தான் பயங்கரவாதத்திற்கு எதிரானவன் எனவும் முப்படையினரால் பெற்றுக் கொடுக்கப்பட்ட அமைதியை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரினதும் கடமை எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஆதரவளிக்க உள்ள வேட்பாளர் தொடர்பில் மற்றைய சிறிய கட்சிகளுடன் கலந்துரையாடுவதாகவும், மிக விரைவில் எமது முடிவு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb