பணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்..

நுவரெலிய பகுதியில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி கொண்டு வந்த நபர் ஒருவரின் பணப்பையை கொள்ளையிட்டு அவரை கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாதுகாப்பு சுவருக்க அருகாமையில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று அதிகாலை தனது பாரவூா்தியில் கரட் தொகையினை கொண்டு வந்து சில கடைகளுக்கு உலாவி கொண்டிருந்த பொழுது மர்மமான முறையில் இரு இளைஞர்கள் அவரை பின்தொடா்ந்து செல்லும் விதம் அங்கு பொருத்தப்பட்டுளள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியிருந்தது.

Share:

Author: theneeweb