20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்..

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சி செய்யும் அமைச்சர்கள் 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் 25 வருட வாக்குறுதியை மரணத்தில் இறுதி தருணத்திலேனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அதிற்கு பதிலளித்து டுவிட்டர் பதிவை இட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்இ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தனக்கு எந்தவித கருத்து முரண்பாடும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொது இணக்கப்பாடுகளின் போது பிரச்சினை ஏற்படுவதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாகாண சபை சட்டத்திருத்தத்தின் போது திருட்டுத்தனமாக சரத்துகளை கொண்டு வந்தததாகவும் 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வரும் போது மகிந்த ராஜபக்ஷவும் அவ்வாறே செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Author: theneeweb