அடுத்த அரசாங்கத்தை உருவாக்க பங்களிப்பு செய்வேன்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையுடன் இசைந்துபோகும் தரப்பினருடன் இணைந்து, அடுத்த அரசாங்கத்தை உருவாக்க பங்களிப்பு செய்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட மாநாட்டுக்கான நிகழ்வில் வெலிகம பகுதியில் இணைந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், நாட்டுக்காக அரசியலில் ஈடுபடும் தரப்பினருடனேயே இணைந்து செயற்பட உள்ளோம்.

எனவே, கட்சி, சின்னம் என்பன குறித்து பிரச்சினை இல்லை.

ஊழல், மோசடி மற்றும் உலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைந்து ஆட்சியை அமைக்க தாங்கள் தயாரில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb