470 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு..

கிளிநொச்சி-இரனைதீவு-வலைப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 470 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பீடி இலைகள் கடலில் மிதந்துக் கொண்டிருந்த போது மீட்க்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Author: theneeweb