கிளிநொச்சி கோணாவில் பாடசாலை நீதி கோரி போராட்டம்

 கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து   நீதி கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை பாடசாலை ஆரம்பித்த போதே மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
 அண்மையில் பாடசாலையின்  அதிபர் அலுவலகம் உடைக்கப்பட்டு  எரிக்கப்பட்டு  மாணவர்களின் ஆவணங்கள் உட்பட பெரும்பலான ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பில் இதுவரை எவ்விதமான  நடவடிக்கைகளும் இதுரையும் மேற்கொள்ளப்படவில்லை எனவே விரையில் அதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறும்,  நிரந்திரமாக காவலாளியை நியமிக்குமாறும் கோரியிருந்தனர்.
  இதன் போது போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கமலராஜன் வருகை தந்து மாணவர்களுடன் பேசிய பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது அதன் பின்னர் அனைத்து மாணவர்களையும் அழைத்து மாணவர்களிடம்  இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை திணைக்களமும் பொலீஸாரும்  மேற்கொண்டு வருகின்றோம்  வெகு விரைவில் இது தொடர்பான தீர்வு  பெற்றுக்கொள்ளலாம் என வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்த பின்னர் மாணவர்கள்  வகுப்பறைக்கு சென்றார்கள்.
Share:

Author: theneeweb