ரணிலால் தான் விரும்பிய இடத்திற்கு நாட்டை கொண்டு செல்ல முடியவில்லை

மேற்குலக நாடுகள் தமது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள மீண்டும் தற்போதைய ஆட்சியை கொண்டுவர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் 2015 ஜனவரி 8 ஆம் திகதி பயணிக்க இருந்த பாதையை அவர்களால் தற்போது உணர முடிந்துள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தான் விரும்பிய இடத்திற்கு நாட்டை கொண்டு செல்ல முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

அதேபோல், மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரம் அளிக்க மேற்குலக நாடுகள் முயன்று வருவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மேலும் பிளவை ஏற்படுத்தி அவர்களை எதிரிகளாக்க முனைவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் வாசுதேவ நாணயக்கார இங்கு உரையாற்றினார்.

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறும் அவர்களிடன் தாக்குதல் தொடர்பில் தன்னிடமுள்ள ஆதாரங்களை சந்தேகமின்றி வழங்குவதாக கர்தினால் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்மூலம் தற்போது தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டாம், மூன்றாம் நிலை குற்றவாளிகளே கைது செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் கூற முற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இந்த தாக்குதலை அரசாங்கம் செய்தாக அவர் சொல்லாமல் சொல்லியதாகவும் அவ்வாறு சொல்வதில் எந்தவொரு தவறும் இலலை என கூறினார்.

அரசாங்கமே திகன பகுதியில் கலவரம் ஏற்படுத்தியதாகவும் அதற்கும் மேல் கடுமையான சம்பவத்தை அரசாங்கம் செய்தமை குறித்து நேரடியாக குற்றம் சாட்டுவதாகவும் கூறினார்.

இது தேர்தலை ஒத்திவைக்க எடுக்கும் முயற்சி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb