தகனம் செய்யப்படும் இடத்துக்கு உரிமைக் கோர முடியாது

காலஞ்சென்ற கொழும்பு – மேதலாலங்காரகித்தி தேரரின் பூதவுடல், முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தம் வழங்கும் நீர்நிலைக்கு அருகில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தகனம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் அவரது பூதடவுலை தகனம் செய்ய முயற்சித்தமைக்கு எதிராக, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இதன்படி குறித்த ஆலயம் அல்லது விகாரைக்கு அருகில் அல்லாமல், நாயாறு வீதியில் உள்ள கடற்கரைப் பிரதேசத்தில் தகன நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், தகனம் செய்யப்படும் இடத்துக்கு உரிமைக் கோர முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்து சில நிமிடங்களில், அவரது பூதவுடல் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் உள்ள தீர்த்தக்கரையில் தகனம் செய்யப்பட்டிருந்தது.

பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் இதற்கான நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த நீதிமன்றம் தீர்ப்பு கிடைப்பதற்கு தாமதித்த நிலையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் பூதவுடல் தீர்த்தக்கரையில் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுவருவதாகவும், மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் உப செயலாளர் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார்

Share:

Author: theneeweb