2 பிள்ளைகள் வௌிநாட்டில் – தாயின் பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் பேங்க் சால் குருநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் மூதாட்டி எந்தவித துணையுமின்றி தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மழை பெய்து கொண்டிருந்த பொழுது மூதாட்டியை பார்க்கச் சென்ற உறவினர்கள் சடலமாக கண்டதை அவதானித்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தனர்.

எனினும் வைத்தியர்கள் ஏற்கனவே மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஜோசப் மேரி ஜோசப்பினா வயது 61 , என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீதான விசாரணை இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் திறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூறு பரிசோதனைக்கு சடலம் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb