சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் இருவர

இரண்டு விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்த நிலமையினால் பாதிக்கப்பட்ட விஷேட தேவையுடைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்திற்கு சமனான ஓய்வு ஊதியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவர்கள் உயிருடன் இருக்கும் காலம் வரையில் இந்த ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள், தாம் உயிரிழந்த பின்னரும் தமது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு குறித்த ஓய்வு ஊதியத்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து தொடர்ந்தும் ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இரண்டு விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb