அடையாளம் காணப்படவேண்டிய ஆபத்தான சக்திகள் – – கருணாகரன்

“எழுகதமிழ்” பற்றியமதிப்பீடுகளும்விமர்சனங்களும்பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றன. சில தரப்புகள் ஆதரவாக. சில தரப்புகள் எதிராக. சில விமர்சனங்கள் மட்டுமே கவனத்திற்குரியனவாக உள்ளன. அதாவது அதனுடைய சாதக பாதக அம்சங்களை வரலாற்று அனுபவங்களோடும் யதார்த்த நிலைமைகளோடும் மதிப்பிட்டு ஆய்வு செய்யப்படுவனவாக.

 

ஆனாலும் எப்படியோ எழுக தமிழ் என்ற மக்கள் பங்கேற்பு நிகழ்வைக்குறித்த விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்திருப்பது வரவேற்கக் கூடியதே. இதுநல்லது. தமிழ்ச்சூழலுக்குமிகமிகஅவசியமானது.

 

எழுக தமிழைப்போல முன்னரும் பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பொங்குதமிழ், எழுக தமிழ் 01 என்றவாறாக. அப்பொழுதும் எதிராகவும் ஆதரவாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவை இந்தளவுக்கு மிகக் கூராகவும் கிட்டியதாகவும் இல்லை. அவற்றை முன்னெடுத்த சூழலும் தரப்புகளும் அப்படி இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

 

பொங்குதமிழை புலிகள் பின்னணியாக இருந்து முன்னெடுத்தனர். அல்லது பொங்குதமிழுக்குள் புலிகள் சுலபமாக ஊடுருவியிருந்தனர். பொங்கு தமிழின் ஆரம்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சில விரிவுரையாளர்கள் என்பதாக இருந்தாலும் பின்னர் அது புலிகளுக்கு ஆதரவான அல்லது புலிகளுடைய ஆட்கள் என்று சொல்லப்படக் கூடிய அளவுக்கானது. இதனால் புலிகளின் எதிராளர்களைத் தவிர, ஏனையோரெல்லாம் பொங்குதமிழை ஆதரிப்போராகவே இருந்தனர். அப்போதைய பொங்கு தமிழ் நிகழ்வுகளில் அன்றைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபத்தியிரண்டு பேரும் மகிழ்ச்சியோடு பங்குபற்றியிருந்தனர். அவ்வளவு சனத்திரளின் மத்தியில் உயர்ந்து நிற்பதற்கு பொங்கு தமிழ் அவர்களுக்கு உதவியது.

 

இதனால் அந்தத் தரப்பிலிருந்து விமர்சனங்களோ எதிர்ப்போ வரவில்லை.

 

புலிகளின் அரசியலில் விமர்சனம் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் பொங்குதமிழ் எழுச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அதற்கான தர்க்க நியாயங்களை முன்வைத்துப் பேசினார்கள்.

 

பொங்குதமிழ் காலம் முடிந்த பிறகு எழுக தமிழ் காலம் என ஒன்று வந்தது. எழுக தமிழை யாழ்ப்பாணத்தில் மையங்கொண்டியங்கிய தமிழ் மக்கள் பேரவையினர் நிகழ்த்துவதற்குப் பின்னணியாக இருந்தனர் அல்லது அவர்களுடைய கண்டு பிடிப்பாக அது இருந்தது. அப்பொழுது தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டும் மையச் சக்திகளாக இருந்தன.

 

கூடவே முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் அவருடைய ஆதரவாளர்களும் ஒன்றாக நின்று ஆதரித்தனர். மேலும் புளொட் சித்தார்த்தனும் எழுக தமிழின் ஓரத்தில் நின்றார். ஆக மொத்தத்தில் முதலாவது எழுக தமிழுக்கு ஒரு ஆதரவுத்தளம் பலமாக இருந்தது எனலாம்.

 

ஆனால், இப்பொழுது அந்த நிலைமை இல்லை. வடக்கு மாகாணசபை கலைந்ததற்குப் பிறகு, அதுவரை முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆதரித்ததோடு எழுக தமிழும் தமிழ் மக்கள் பேரவையும் கேள்விக்குள்ளாகின. அவற்றிற்கு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் முளைக்கத் தொடங்கின. ஆதரவாளர்களின் தொகையை விடவும் எதிர்ப்பாளர்களின் தொகை பெருகியது.

 

இதற்குக் காரணம், தமிழ் மக்கள் பேரவையோடும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனோடும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – கஜேந்திரகுமார் அணி – க்கு ஏற்பட்ட விரிசல்களாகும். மட்டுமல்ல சுரேஸ் பிரேமச்சந்திரனோடும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனகத் தொடங்கினர். தன்னுடைய எதிர்ப்பை வலிமையாக்கிக் கொள்வதற்கு அதுவரையிலும் பங்காளியாக சுரேஸைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒரேயடியாகவும் எதிர்க்கவும் தூற்றவும் தொடங்கினர்.

 

ஆக மொத்தத்தில் “குழப்படிக்காரப் பெடியன்” என்று வர்ணிக்கப்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவருடைய ஆதரவாளர்களும் எழுக தமிழுக்கு எதிரான தரப்பினராகச் செயற்படத் தொடங்கினர்.

 

இது ஒரு பக்கத்தில் என்றால் மறுபக்கத்தில் கூட்டமைப்பும் எழுக தமிழுக்கு எதிராகவே செயற்பட்டது. கூட்டமைப்பிற்குத் தன்னுடைய பின்பகுதியைக் காட்டிவிட்டுப் புறப்பட்டு விட்டார் விக்கினேஸ்வரன் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினருக்கு எழுக தமிழ் நிகழ்வை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. கூடவே எழுக தமிழோடு பிணைந்திருக்கும் முன்னாள் நண்பரான சுரேஸையும் வீழ்த்துவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விளைந்தது கூட்டமைப்பு.

 

ஆக மொத்தத்தில் எழுக தமிழுக்கு கூட்டமைப்பும் எதிர்ப்பு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் எதிர்ப்பு. நேடியாகச் சொல்லாமல் விட்டாலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் இடதுசாரிகளும் எதிர்ப்பு என்ற நிலையிலேயே எழுக தமிழ் நிகழ்வுகள் நடந்தேறின.

 

எனவேதான் இந்தளவுக்கு கடுமையான விமர்சனங்கள்.

 

எந்தப்போராட்டத்தைப்பற்றியும்விமர்சனங்கள்முன்வைக்கப்படுவதுஅவசியமே. அப்பொழுதுதான்அந்தப்போராட்டத்தைப்பற்றிப்பலகோணங்களில்மக்கள்அறியக்கூடியதாகஇருக்கும்.

 

அந்தப்போராட்டத்தின்பயன், பயனின்மை, அதைமுன்னெடுக்கும்தரப்புகளின்திறன், திறனின்மைஎனஅனைத்தைப்பற்றியும்அறிவதற்கு இந்த விமர்சனங்கள் பேருதவியாக இருக்கும்.கூடவேமுன்னெடுக்கப்படும்போராட்டம், போராட்டவடிவம், அதைமுன்னெடுக்கும் சூழல், அதனுடைய பின்னணி, அதை முன்னெடுக்கும் தரப்புகள் எனப் பலவற்றைப் பற்றியும் மக்கள் அறியக் கிடைக்கும். இதெல்லாம் அந்தப் போராட்டத்தைச் செழுமைப்படுத்தும்.

 

இவ்வாறான நிலைமை என்பது அந்தப் போராட்டத்தை முன்னெடுப்போருக்கும் இது மேலதிக அறிவையும் புரிதலையும் உண்டாக்கும். தம்மை மீள் பார்வைக்குட்படுத்தவும் மதிப்பிடவும் சுயவிமர்சனம் செய்யவும் வாய்க்கும். இந்த நிலைமை இல்லாத காரணத்தினால்தான் கூட்டமைப்பினர் மிகப் பாரதூரமான அரசியல் தவறுகளைப் பகிரங்கமாகவே விடுகின்றனர்.

 

ஆனால், காழ்ப்புகளையும்வசைகளையும்பழிதீர்த்தலையும்விமர்சனம்என்றபேரில்வைப்பது  நல்லதல்ல.

 

எழுகதமிழ்பற்றிப்பேசுவோரில்இரண்டுதரப்பினரும்உள்ளனர். முதலாவதுவகையினர்அரசியலைஅறிவுபூர்வமாக, பயனுடையதாகஅணுகமுற்படுகிறார்கள். இதில்வெவ்வேறுவகையானநோக்குநிலைகளும்கருத்துவேறுபாடுகளும்நமக்கிருக்கலாம்.

 

ஆனால், அவர்களிடையேகாணப்படும்வேறுபாடுகள்அரசியல்அறிவுக்குப்பயனுடையது. முன்னேற்றகரமானது.

 

இரண்டாவதுவகையினர்எந்தவகையிலும்சமூகத்துக்குரியவர்களில்லை. அவர்கள்தமக்கேபயனாகஇருக்கமாட்டார். எப்பொழுதும் பிறருக்குத் தலையிடியைத் தருவோராகவும் வெறுப்பூட்டுவோராகவும் சலிப்பான்களாகவுமே இருப்பர். நாம் இன்று இந்த இரண்டு தரப்பினரையும் எதிர்கொண்டே ஆக வேண்டிய சூழல். இன்றுதான் நமது சமூக வெளியில் பகிரங்கமான உரையாடல்கள் நடக்கின்றன. ஆகவே இதில் எல்லாவிதமான கருத்துகளும் அபிப்பிராயங்களும் வரும். எல்லா வகையான நிலைப்பாடுகளுக்கும் இடமிருக்கும். இது இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போல, தமிழ்ச் சூழல் ஜனநாயக மயப்படுவதற்கான ஆரம்ப நிலைகளாகும்.

 

ஆம், நிச்சயமாகத் தமிழ்அரசியற்சூழல்மெல்லஜனநாயகமயப்பட்டுவருவதாகவேதெரிகிறது. இந்தஜனநாயகமயப்படுத்தலின்முதற்படிபோராட்டத்தைமுன்னெடுக்கும்தரப்புகளைப்பற்றியும்போராட்டம்பற்றியும்எவரும்விமர்சிக்கக்கூடியதாக, கருத்துகளைமுன்வைக்கக்கூடியதாகஇருப்பதாகும். அதைத்திறந்தமனதோடுவரவேற்கமுடிந்தால்  அது இன்னும்சிறப்பு.

 

 

தற்போதுதமிழரசுக்கட்சிஉள்ளடங்கலானதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, ஈழமக்கள்ஜனநாயகக்கட்சி, தமிழ்த்தேசியமக்கள்முன்னணி, தமிழ்மக்கள்பேரவை, தமிழ்மக்கள்விடுலைப்புலிகள், சமத்துவம்சமூகநீதிக்கானமக்கள்அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர்சமூகஜனநாயகக்கட்சிஎனஅனைத்துத்தரப்பின்மீதும்பலரும்தங்களுடையவிமர்சனங்களைமுன்வைத்துவருகின்றனர்.

 

இதைப்போலசம்மந்தன், டக்ளஸ்தேவானந்தா, சுரேஸ்பிரேமச்சந்திரன், வரதராஜப்பெருமாள், சிவனேசதுரைசந்திரகாந்தன் (பிள்ளையான்) முருகேசுசந்திரகுமார், விக்கினேஸ்வரன்எனஅனைத்துத்தலைவர்களும்விமர்சிக்கப்படுகிறார்கள்.

 

பதினைந்துஆண்டுகளுக்குமுன்புஇவ்வாறானதொருநிலைதமிழ்ச்சூழலில்நினைத்துப்பார்க்கவேமுடியாதஒன்று.

இதுமுன்னேற்றமானவிசயமே.

 

ஆனால், இப்பொழுதும் பழைய கனவிலும் அதிகாரப்  கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல் சனங்களை அச்சுறுத்தும் தொனியில் பேசுவதும் வசை பாடுவதும் பழி தீர்ப்பதுமாகவே ஒரு சிலர் அரசியலை முன்னெடுக்கின்றனர்.

 

இவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் மட்டுமல்ல தமிழ்ச்சமூகத்தின் இருப்புக்கும் எதிர்காலத்துக்குமே எதிரானவர்கள். ஆபத்தானவர்கள்.

 

இதையெல்லாம் புரிந்து கொண்டு செயற்படுவதற்குத் தமிழர்கள் பயில வேண்டும்.

Share:

Author: theneeweb