சஜித்தின் கோரிக்கைக்கு திஸ்ஸ இணக்கம்

பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து வௌியேறியுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்த அனைவரும் மீண்டும் கைக்கோர்க்குமாறு கடந்த தினம் அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்ட கோரிக்கைக்கு இணங்கி செயற்பட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து வௌியேறியுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்த பிரதித்தலைவரின் தாழ்மையான கோரிக்கைக்கு மரியாதை அளிப்பதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் குறித்த கோரிக்கையில் தனது பெயரை குறிப்பிட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க பிரதித்தலைவரின் கோரிக்கை தொடர்பில் நன்கு சிந்தித்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்ட போதும் அதற்கு மாறாக தீர்மானம் எடுக்கப்பட்டதை அடுத்து தான் கட்சியில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சியின் வெற்றிக்காக மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb