நாடு பூராகவும் பல பணிபகிஷ்கரிப்பு போராட்டங்கள் –

பாடசாலை கல்வி சாரா ஊழியர்கள் நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதன் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினங்களில் உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலக தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், அரச நிர்வாக அதிகாரிகள் சங்கம் 15 ஆவது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

மேலும், அரசு நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தொடர்ந்தும் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது

Share:

Author: theneeweb