அடேங்கப்பா…..! திலீபனின் ஓராண்டு நிறைவில் நினைவு தூபி அமைத்தவன் நான் – சிறிதரன் ( வீடியோ இணைப்பு)

திலீபனின் ஓராண்டு நிறைவில் நினைவு தூபி அமைத்தவன் நான் – சிறிதரன் ( வீடியோ இணைப்பு)

திலீபன் இறந்து ஒராண்டுக்குள் தான் யாழ்ப்பாணத்தில் திலீபனுக்கு நினைவு தூபி ஒன்றை அமத்து அப்போது மாநாகர சபை ஆணையாராக இருந்த சிவிகே. சிவஞானத்தை கொண்டு திறந்து வைத்தவன் நான் என்று கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று(26) தமிழரசு கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு பிறந்த பாராளுமன்ற சி.சிறிதரன் அவர்களுக்கு திலீபனின் ஓராண்டு நிறைவில் இருபது வயது இக் காலத்தில் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சி மக்களுக்கு வரலாறு தெரியாது என எண்ணி பச்சைப் பொய்யுரைத்துள்ளார் என நிகழ்வில் கலந்துகொண்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share:

Author: theneeweb