முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 46 பாடசாலைகளில் 2010 மாணவர்களுக்கு பற்சுகாதார செயற்றிட்டம்

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு கீழ் உள்ள 46 பாடசாலைகளைச் சேர்ந்த 2010 தரம் ஒன்று மாணவர்களுக்கு பற்சுகாதார செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவச் நிதியத்தின் அனுசரணையில் வருடந்தோறும் மேற்கொளளப்பட்டு வரும் இச் செயற்றிட்டத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது செயற்றிட்டம் புதன் கிழமை முல்லைத்தீவு   வலயக் கல்வித்திணைக்களத்தின் தொழிற் பயிற்சி நிலையத்தி் இடம்பெற்றது
இதன்போது 2010 மாணவர்களுக்கான பற்தூரிகைகள் மற்றும் பற்பசைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் பற்சுகாதாரத்தை பேணும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன  பற்சுகாதார செயற்றிடத்தின் இவ் வருடத்திற்கான மூன்றாவது கட்டம் இதுவாகும் . தரம் ஒன்று மாணவர்களுக்கு பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், மற்றும் பாடசாலைகளில்   நடமாடும் பற் சிகிசைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உத்தியோகத்தர்கள், வலயக் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb