மன்னாரில் சுவரொட்டிகள்

மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாத சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இவ் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் “சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்” என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்கலும் கிடைக்கவில்லை.

ஆனாலும் மன்னார் மாவட்டம் அனைத்து மதத்தினருக்கும் உரிய பூமி எனவும் எந்த தனி நபர்களும் எங்கள் மத ஒற்றுமையை இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் சீர்குழைக்க முடியாது என பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான மத வாத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share:

Author: theneeweb