சஜித்தின் சின்னம் ‘அன்னம்’

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச ´அன்னம்´ சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (26) பிற்பகல் 3.00 மணி அளவில் கூடியது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தான் ´அன்னம்´ சின்னத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

Share:

Author: theneeweb