வியாபாரங்களில் பாரிய வீழ்ச்சி

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாரியளவில் வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற தேசிய வணிக மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

மத்திய வங்கியின் கொள்ளையின் மூலம் நாடே நாசமாகியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

கடந்த 5 வருங்களில் நாடு பின்நோக்கி சென்றுள்ளதாக தெரிவித்த அவர், அபிவிருத்தி பாதியிலேயே நின்று விட்டதாகவும், மத்திய வகுப்பினரை நாசம் செய்த அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு வர இடமளிக்க முடியாது என தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்துள்ள வியாபாரங்களை மீண்டும் நசுக்குவதை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ள வியாபாரங்களை மீள கட்டியெழுப்புவதற்கே நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

உங்களுக்கு நாடு தொடர்பில் புரிதல் உள்ளது, மக்களை தௌிவு படுத்தக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share:

Author: theneeweb