கடலில் மூழ்கி மக்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சிறந்த, தரமான பொலிஸ் சேவையை முன்னெடுப்பதற்காக இவ்வாறான மாதாந்தர கூட்டத்தை ஜனாதிபதி நடத்தி வருகின்றார்.

அதற்கமைய இன்றைய கூட்டத்தில் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான விடயங்கள் மதிபாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதிகாரிகளின் வைத்திய பரிசோதனை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, பொலிஸ் வைத்தியசாலையில் காணப்படும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்தி செய்து, அங்கு புதிய மருத்துவர்களை ஈடுபடுத்தவும் மற்றும் பொலிஸ் நிறைவேற்று சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பள பிரச்சினையை தீர்த்து வைக்கவும், இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், மக்களை மிரட்டி பணம் பெறும் செயற்பாட்டை தடுக்கும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் சிறைகளில் கையடக்க தொலைப்பேசி பாவனையை ஒழிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்புக்கு அண்மையில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் இடம்பெறும் கடலில் மூழ்கி உயிரிழக்கும் நிலையை தடுப்பது குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல தரங்களின் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share:

Author: theneeweb