அமைச்சர் சஜித்திற்கு யானை கூட இல்லை.. எதிர்கட்சித் தலைவர்

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு, ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுகின்ற வாய்ப்பகூட இல்லாமல் போய் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் கள் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இன்று அவர், எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடத்தினார்.

இதன்போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி இந்தமுறை யானை சின்னத்தில் அல்லாமல், வேறொரு சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு யானை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று மகிந்த இதன்போது கூறினார்.

Share:

Author: theneeweb