மேதாலங்கார தேரரின் பூதவுடல் தகனம்.. இன்றும் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள்

மறைந்த கொழும்ப மேதாலங்கார தேரரின் பூதவுடல், முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருக்கோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குறித்த சம்பவத்தை கண்டித்து எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இன்றைய தினம் நான்காவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய தினமும் நீதிமன்ற செயற்பாடுகளில் தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை மீறிய செயற்பாட்டை கண்டித்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் யாழ்ப்பாணத்தில் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

போராட்டத்திற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், மத குருமார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதேவேளை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளும் மட்டக்களப்பில் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

Share:

Author: theneeweb