49 வது (வன்னி) இலக்கியச் சந்திப்பு சொன்ன சேதிகள் – உமாதேவி

49 வது இலக்கியச் சந்திப்பு (வன்னி) கிளிநொச்சியில் 2019 செப்ரெம்பர் 21, 22 இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளன. இரண்டு முழுநாள் நிகழ்வுகளிலும் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள், சினிமாத்துறையினர், நாடகவியலாளர்கள் எனப் பலர். இரண்டு நாட்களிலும் பதினாறு தலைப்புகளில் விடயங்கள் பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்புகளும் முக்கியமானவை. சில விடயங்கள் இதுவரையில் எங்குமே கவனமெடுத்துப் பேசப்படாதவை.

முதல்நாள் காலை நிகழ்வில் வன்னி – நிலம், நீர், சமூகம் – (வளப்பகர்வுப் பிரச்சினைகள்) என்ற தலைப்பில் பெருமாள் கணேசன் உரையாற்றினார். 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் தென்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள், நம்பிக்கையோடு தமிழ்ப்பகுதியை நோக்கி வந்தனர். அப்படி வடக்கு நோக்கி வந்தவர்களுக்கு வடக்கிலே இழைக்கப்பட்ட நீதி மறுப்பை மையப்படுத்தியதாக கணேசனுடைய உரை இருந்தது. குறிப்பாக வன்னிப்பகுதியில் குடியேற்றப்பட்ட மலையக மக்களுக்கு வளமான நிலப்பகிர்வைச் செய்வதிலும் பாசன நீரைப் பெறும் உரிமையை மறுப்பதிலும் வடக்குத் தமிழ்ச்சமூகம் காட்டிய பேதங்களைக் கணேசன் சுட்டிக்காட்டினார். மிகச் சாமர்த்தியமாக யாழ்ப்பாணத்துக்குள் இந்த மக்களை எடுக்காமல், வெளியே – வன்னிக்காட்டில் நிறுத்திக் கூலிகளாகப் பயன்படுத்திய தந்திரத்தைக் கணேசன் சுட்டினார்.

தொடர்ந்து ரீ.எஸ் யோசுவாவினால் வறுமையின் நிறம் பச்சை – பிரதிகள் காட்டும் வழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது. வறுமையைப் போக்க உதவுவதாகச் சொல்லி, தங்களில் தங்கியிருக்க வைப்பதே பலருடைய அணுகுமுறையாக உள்ளது என்றார் யோசுவா. இதில் கூடுதலாக ஈடுபடுவது தொண்டு நிறுவனங்களும் புலம்பெயர் மக்களுமே என்றும் குறிப்பிட்டார்.

இதற்கடுத்ததாக வன்னிக்காடு – வாழ்வும் அரசியலும் (அன்றும் இன்றும்) என்பதைப்பற்றிய முருகையா தமிழ்ச்செல்வனின் உரை அமைந்திருந்தது. மக்களிடம் காடுகளிருந்தபோது அவை பாதுகாக்கப்பட்டன. காடுகளைப் பாதுகாத்தே தங்களுக்கான வளங்களையும் தேவைகளையும் மக்கள் பெற்றுக் கொண்டனர். காட்டின் அதிகாரத்தை அரசாங்கம் சுவீகரித்துக் கொண்டபோது அது கட்டற்ற விதமாக அழிக்கப்படுகிறது. அத்தோடு காட்டுக்கும் மக்களுக்கும் இடையில் காலாதிகாலமாக இருந்த உறவும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய தவறாகும் என்றார். இந்த மூன்று முன்வைப்புகளும் எழுத்தாளர் கருணாகரனின் ஒருங்கிணைப்பில் நடந்தன.

முதலாம் நாள் மாலை அமர்வை எழுத்தாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ஒருங்கிணைத்தார். இதில் அந்தரிப்புக்குள்ளானோரும் சமூகத்தின் பொறுப்பும் (காணாமலாக்கப்பட்டோர், போரில் இழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தோர் பிரச்சினை) பற்றி சிங்கம் பேசினார். இந்தப் பிரச்சினைகள் எளிதில் தீர்த்துவிடக் கூடியவையல்ல. இதற்குப் பொறுதியும் நிதானமும் கூடிய உரையாடல்கள் அவசியம். கதைப்பதே ஆகச் சிறந்த வழி. இந்தப் பிரச்சினையில் அனைத்துத் தரப்புகளுக்கும் பொறுப்புண்டு. கதைப்பதன் வழியாக இதைக் கடந்து செல்ல முடியும் என்றார். அடுத்ததாக முஸ்லிம் சமூகமும் சமகால நெருக்கடிகளும் என்ற பொருளில் சிராஜ் மஹ்ஸூர் தன்னுடைய முன்வைப்பைச் செய்தார். சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின்மீது உருவாக்கப்பட்டு வரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ள முஸ்லிம்களின் சவால்களைக் குறித்த சிராஜின் உரை பலரையும் சிந்திக்க வைத்தது.

இதைத் தொடர்ந்து தானா விஷ்ணுவினால் இலக்கிய அரசியல்உண்மையும் விடுபடலும் என்ற தலைப்பிலான உரை முன்வைக்கப்பட்டது. இதன்போது சர்ச்சைக்குரிய பல கருத்துகளை விஷ்ணு துணிகரமாக முன்வைத்தார். இலக்கிய அறம் என்பது என்ன? அதில் சுட்டப்படும் உண்மைகளை நாம் எதிர்கொள்ளத் தயாரா? பலரும் தங்களுடைய மனசறிய உண்மைக்கு மாறாக – சந்தைக்கு ஏற்றவிதமாகவே எழுதுகிறார்கள். இதற்கெங்கே சமூக மதிப்பேற்படும் என்பாக அவருடைய உரை இருந்தது. இதற்கடுத்ததாக பிரதிகளில் இயற்கை, சூழல், உயிரினங்கள் என்ற பொருளில் அம்ரிதா ஏயெம் சில முன்வைப்புகளைச் செய்தார். இயற்கையைப் பிரதிகளில் வெளிப்படுத்திய படைப்புகளையும் படைப்பாளிகளையும் நிரற்படுத்திய அம்ரிதா காடு மற்றும் கடல், மலைப்பிரதேசங்களில் இயற்கையை குலையாதவாறு பேணுவது, புத்துருவாக்கம் செய்வது பற்றியெல்லாம் நடைமுறை அனுபவங்களோடு பேசினார்.

இரண்டு அமர்வுகளிலும் செறிவான உரையாடல்களும் விவாதங்களும் நடந்தன.

ரண்டாம்நாள் காலை அமர்வுக்கு ராகவன் ஒருங்கிணைப்பைச் செய்தார். இதன்போது போருக்குப் பிந்திய ஈழ இலக்கியம் – கச்சாப்பொருள், சந்தை, பதிப்பு முயற்சிகள் என்ற தலைப்பில் கிரிஷாந்தின் உரை நிகழ்ந்தது. போருக்குப் பிந்திய படைப்புகளின் தொனி போரைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. தமிழகம், புலம்பெயர் தேசம் உள்ளிட்ட இடங்களின் சந்தைக்கென பிரதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றனவா? என்ற தொனியில் கிரிஷாந்தின் உரை அமைந்தது. இரண்டாவது முன்வைப்பாளர் குமாரதேவன், ஊடக சுதந்திரத்தில் தமிழ்ப்பத்திரிகைகளின் நிலை – ஒரு வாசக நிலை நோக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ப்பத்திரிகைகளில் காணப்படும் குறைபாடுகளைப் பிரதானப்படுத்தித் தன்னுடைய கவனங்களை முன்வைத்தார் குமாரதேவன்.

இதற்கடுத்ததாக ஈழ அகதிகள் – தமிழகத்திலும் தமிழகத்திலிருந்து ஈழத்திலும் என்ற பொருளில் தன்னுடைய அனுபவங்களையும் இணைத்து விரிவானதொரு உரையை ஆற்றினர் தொ. பத்திநாதன். இதில் அவர், இத்தனை ஆண்டுகாலமாக தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளைப்பற்றிய பொதுக்கவனம் ஈழத்தமிழர்களிடத்திலே இல்லாமல் போனது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினர். தமிழகத்திலுள்ள அகதிகள் ஐ.நா. சாசனத்தில் பரிந்துரைக்கப்பட்ட நியமங்களுக்கு அப்பால் வைத்தே நடத்தப்படுகிறார்கள். அவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகள் என்ற நோக்கில் வைத்தே இந்திய அரசு கையாள்கிறது. கால நீட்சியானது அவர்களைப் பல்வேறு சிக்கல்களுக்குள்ளாக்கியுள்ளது. இன்று அவர்களில் பலரும் அந்தச் சூழலுடன் பழக்கமாகி விட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது அங்கே சட்டபூர்வமான குடியுரிமையே என்றார் பத்தி.

இதற்குப் பிறகு போருக்குப் பின்னரான சிறுகதைப்பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும் என்ற தலைப்பில் பிரிந்தனின் உரை நிகழ்ந்தது. தன்னுடைய வாசிப்பு அனுபவங்களைச் சொன்னார் பிரிந்தன்.

இரண்டாவது நாள் மாலை அமர்வு மகேந்திரன் திருவரங்கனின் நெறிப்படுத்தலில் ஆரம்பமாகியது. இதில் முதலாவதாக யதார்த்தன் பேசினார். தலைப்பு, தெய்வம், சடங்கு, மரபு – வன்னி நிலமும் கையளிப்புகளும். மாறியும் மாற்றப்பட்டும் வரும் மரபு ஆக்கிரப்பின் நிழலில் இவ்வாறு நெருக்கடிக்குள்ளாகிறது எனச் சுட்டினார் யதார்த்தன். முறையான சமூகவியல் மற்றும் பண்பாட்டாய்வுகள் வன்னியை மையப்படுத்தி நடக்கவில்லை என்று யதார்த்தன் குற்றம் சுமத்தினார். இதைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ்க்கவி, வரலாற்றின் பயணவழியில் மக்கள் பண்பாடும் போர்ச்சுவடுகளும் என்ற தலைப்பில் பேசினார். வரலாற்றுப் புனைவுகளையும் வரலாற்றுண்மைகளையும் மையப்படுத்திய தமிழ்க்கவி, பண்டாரவன்னியன் மன்னன் அல்ல. அவர் அந்த நாளில் ஒரு கொள்ளையர் தலைவன் என்றுரைத்தார். இதற்குப்பிறகு, திரையும் நிஜமும் என்ற தலைப்பில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த “மேற்குத்தொடர்ச்சிமலை” என்ற திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி உரையாற்றினர். தமிழ் வாழ்வில் திரை என்ற சினிமா கட்டமைத்திருக்கும் பிம்பத்துக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையிலுள்ள இடைவெளி, சிக்கல்கள், யதார்த்தம், நிஜம் என்பதைப்பற்றியதாக லெனின் பாரதியின் முன்வைப்புகளிருந்தன. இறுதியாக எழுத்தாளர் எஸ்.ஏ. உதயன், மரபும் நவீனமும் – மன்னார்ப்பண்பாட்டின் இடையசைவுகள் என்ற தலைப்பில் உரைத்தார். மன்னார்ப்பண்பாட்டில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் கூத்துக்கலையின் உயிர்ப்பில் மன்னார் மக்களின் நம்பிக்கைகளும் ஆற்றலும் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் அவை இன்று இன்னொரு நிலையை நோக்கிக் கட்டவிழ்வதைப்பற்றியும் உதயன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு உரைகளைத் தொடர்ந்தும் விரிவான அளவில் விமர்சனங்களும் மறுப்புகளும் ஏற்புகளும் கேள்விகளுமாக எழுந்தவண்ணமேயிருந்தன. இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெண்கள் முன்வைத்த விவாதங்கள்  கவனத்தைக் கொண்டன. இரண்டு நாள் நிகழ்விலும் இந்தியா, புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பல்வேறு ஆளுமைகளும் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து அடையாளம் பதிப்பகம் சாதிக், பாரதி புத்தகாலயம் சிராஜ், திரைப்பட நடிகர் பூ ராம், மேற்குத்தொடர்ச்சிமலை இயக்குநர் லெனின்பாரதி ஆகியோர் வந்திருந்தனர்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து – லண்டனிலிருந்து ராகவன், நிர்மலா, இளையதம்பி தயானந்தா, ஜேர்மனியிலிருந்து அனெஸ்லி, நோர்வேயிலிருந்து நியூட்டன், பிரான்ஸிலிருந்து றஞ்சனி, அவுஸ்திரேலியாவிருந்து முருகபூபதி, கனடாவிலிருந்து வைகுந்தன், கறுப்பி சுமதி எனப்பலர் வந்து கலந்து கொண்டனர்.

புதிய திறப்புகளைச் செய்திருக்கும் இலக்கியச் சந்திப்பு காற்றோடு கரைந்து போகக்கூடிய விவாதங்களை முன்வைக்கவில்லை. கவனத்திலெடுக்க வேண்டிய சங்கதிகளையே முன்வைத்தது. ஆகவே இந்த அரங்குகளில் பேசப்பட்டவை நடைமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டியவை. களப்பணிக்கு எடுக்கப்பட வேண்டியவை. மையத்துக்குக் கொள்ளப்பட வேண்டியவை. அப்பொழுதுதான் இலக்கியச் சந்திப்பில் கூடிய அனைவருடைய அக்கறைக்கும் உழைப்புக்கும் பெறுமதியாகும்.

இதன் அடுத்த கட்ட முன்னெடுப்புகள் அடுத்து வரும் மாதங்களில் தொடர்வதே நல்லது. அடுத்த இலக்கியச் சந்திப்புக்காகக் காத்திருக்காமல் இடையில் புதிய சந்திப்புகளை நடத்தி, புதிய வேலைகளில் இயங்க வேண்டும்.

இலக்கியச் சந்திப்பில் எழுந்த கேள்விகளில் சிலவற்றை தாருண்யன் ரவி என்பவர் தன்னுடைய முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார். அவை –

இன்றுவன்னியைக்களமாக்கிவருகின்றஇலக்கியப்படைப்புகள்திரும்பத்திரும்பஒரேவிஷயத்தையேபன்னிப்பன்னிமிழற்றுவதாகத்தெரிவதற்குசந்தைப்படுத்தல்வியாபாரநோக்கமும், துரோகப்பெயர்ஏற்கும்அச்சமும், நீரோட்டத்தைவிலகுவதிலுள்ளதயக்கமும்காரணங்களாகஇருக்கலாம்எனச்சொல்லப்படுவதில்உண்மையிருக்குமா?

00

இந்தவருடம்ஏப்ரலில்நடந்தகுண்டுவெடிப்புகளுக்குப்பிறகுகைதானமுஸ்லிம்இளைஞர்களில்மிகச்சொற்பமானவர்களைத்தவிரமற்றஅனைவரும்விடுதலையாவதற்குமுஸ்லிம்அரசியல்வாதிகள்விரைந்துசெயற்பட்டுதீர்வுகண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழ்அரசியல்கைதிகள்விடுதலைக்குபத்துவருடங்களுக்குமேலாகவும்தமிழ்அரசியல்வாதிகளால்எந்தவிதராஜதந்திரநகர்வுகளையும்மேற்கொள்ளமுடியாதிருப்பதுஎதனால்என்றுமுஸ்லிம்தரப்பிலிருந்துவந்தகேள்வி.

00

பண்டாரவன்னியன்மன்னனா? கள்ளர்தலைவனா? வரலாற்றுஆதாரங்கள்உண்மையில்எதைநிரூபிக்கிறது?

00

காணாமல்போனவர்களுக்காகநடத்தப்படும்போராட்டங்களுக்குஆதரவுநல்கும்இலக்கியவாதிகள்ஊடகவியலாளர்கள்அரசியல்கைதிகள்விடுதலைமற்றும்தமிழகத்திலுள்ளஅகதிகள்படும்அவலங்கள்குறித்துஏன்எதுவிதகவனமுங்கொள்வதில்லை?

00

போருக்குப்பின்னும்போரினால்உருவானதமிழ்க்கொதிப்பையேவிலாவாரியாகவிரிவாகப்பேசிக்கொண்டிருக்கும்படைப்புகள்இங்குள்ளமற்றசமூகங்களின்மௌனத்துக்குப்பின்னால்இருந்தகொதிப்புகளைஏன்தேடிப்பார்க்கவும்சொல்லவும்முயலவில்லை?

00

போரினால்பாடழிவையும்கடுந்துயர்ப்பாடுகளையும்அடைந்தமக்கள்கூட்டத்திடமிருந்துபோருக்குப்பின்எழுந்தஇலக்கியப்படைப்புகள்ஏன்போரைஎதிர்த்ததாகஇல்லை?

 

 

 

 

 

 

 

Share:

Author: theneeweb