மூத்தோர் மனம் மகிழும் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் – 2019

மூத்தோர்களுக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தால் 27.09.2019 வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்டது.

மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் மாவட்ட கூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் இப் போட்டிகள் நடத்தப்பட்டது.
.
சங்கீதக் கதிரை,கூடைக்குள் பந்து போடுதல் ஆகிய போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெற்றது.

அத்துடன் 100 மீற்றர் வேகநடை ஆண்களுக்கும்,கிடுகுபின்னுதல் பெண்களுக்கும் நடைபெற்றது.

பிரதேச செயலக மட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட மேற்படி போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மூவர் மாவட்ட மட்டப் போட்டிகளில் பங்குபற்றினார்கள்.

மாவட்ட மட்டப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற உள்ள கிளிநொச்சி மாவட்ட மூத்தோர் விழாவின் போதும் ,

அதனைத் தொடர்ந்து வவுனியாவில் நடைபெற உள்ள வட மாகாணத்திற்குரிய சர்வதேச விழாவின் போதும் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட உள்ளனர்.52

 

Share:

Author: theneeweb