கோட்டாவுக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா?

ஜனாதிபதி ​வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா மத்திய செயற்குழுவுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எதிர்வரும் திங்கட் கிழமை அறிவிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (28) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பான இறுதி முடிவை கட்சியின் செயற்குழுவுடன் கலந்துரையாடி வெகு விரைவில் தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Author: theneeweb