கட்சியை விட்டு சென்றவர்களுக்கு சஜித் அழைப்பு

பல்வேறு காரணங்களுக்காக கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் கட்சிக்கு திரும்புமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் தெரிவு செய்யப்படுவதில்லை என கூறினார்.

முன்பு கூட்டு எதிரணிக்கு ஆதரவளித்த ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்று தான் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்தமை குறிப்பிடதக்கது.

Share:

Author: theneeweb