மீண்டும் மரண தண்டனை உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் உள்ளிட்ட இருவருக்கு பிறிதொரு வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மீண்டும் மரண தண்டனை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புங்குடுதீவுப் பகுதியில் ஆள் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதையடுத்தே அவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கொலை செய்யப்பட்டவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டமைக்காக  10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்துமாறும் அவர்கள் இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த 10 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 10 மாதங்கள் சிறைதண்டனை அனுபிவிக்க நேரிடும் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Share:

Author: theneeweb