முருகபூபதிஎழுதிய“இலங்கையில்பாரதி “ ஆய்வுநூல்: முருகபூபதியின்முன்னுரை

 

தமிழில்உரையாற்றசிரமப்பட்டபாரதியின்கொள்ளுப்பேத்தி!

பாரதியின்ஞானகுருயாழ்ப்பாணத்துச்சாமிஅருளம்பலம்( 1878 – 1942 ) !!

 

 

எனதுபால்யகாலத்தில்ஆரம்பபாடசாலையிலும்வீட்டிலும்கேட்டுரசித்துபாடியபாடல்கள்மகாகவிபாரதியிடமிருந்தேதொடங்கியது. குறிப்பாகஓடிவிளையாடுபாப்பா, தீராதவிளையாட்டுப்பிள்ளைஎன்பனவற்றின்ஆழ்ந்தஅர்த்தம்புரியாமலேயேபாடியிருக்கின்றேன். மனனம்செய்துள்ளேன்.

எனதுஅக்கா,நடனம்பயின்றவேளையில்தீராதவிளையாட்டுப்பிள்ளைக்குஅபிநயம்பிடித்துஆடியபோதுரசித்திருக்கின்றேன். இவ்வாறுதான்எனக்குமகாகவிபாரதியிடத்திலானஉறவும்ஈர்ப்பும்படிப்படியாகத்தொடங்கியது.

பாடசாலைநடத்தியபேச்சுப்போட்டியில்வகுப்புஆசிரியைஎழுதிக்கொடுத்தபாரதிபற்றியஉரையைமனனம்செய்துஒப்புவித்திருந்தாலும்,  பாரதியின்ஞானத்தைகண்டறிவதற்குஎவரும்துணைக்குவரவில்லை.

ராஜம்-கிருஷ்ணன்

எனினும்எமதுநீர்கொழும்பூருக்குதமிழகத்தின்மூத்தபடைப்பாளிகு. அழகிரிசாமியும்பாரதியாரின்பேத்திவிஜயபாரதியும்அவரதுகணவர்பேராசிரியர்சுந்தரராஜனும்வருகைதந்துஉரையாற்றியதையடுத்துபாரதிமீதுஆர்வம்அதிகரிக்கத்தொடங்கியது.

அவர்கள்வரும்போதுஎனக்குபதினைந்துவயதுதானிருக்கும். இலக்கியப்பிரதிகள்எழுதத்தொடங்கிய1970இற்குப்பின்னர்தான்பாரதியைஆழ்ந்தநேசத்துடன்கற்றேன்.

எமக்குமுதல்குழந்தைபெண்ணாகபிறந்ததையடுத்துஅவளுக்குவிஜயபாரதிஎன்றும்பெயர்சூட்டினேன். காலம்கடந்துஅவுஸ்திரேலியாவுக்குவந்தபின்னர், 1990ஆம்ஆண்டிற்குப்பிறகு, ஒருநாள், அவுஸ்திரேலியாசிட்னியிலிருந்துஒருநண்பர்தொலைபேசியில்தொடர்புகொண்டு, ” பாரதியாரின்கொள்ளுப்பேத்திமீரா( சுந்தரராஜன் – விஜயபாரதிதம்பதியரின்புதல்வி) வந்திருப்பதாகதெரிவித்து, அவருடன்உரையாடச்செய்தார்.

இந்தஎதிர்பாராததொலைபேசிஅழைப்புஎனக்குஇன்பஅதிர்ச்சியைத்தந்தது.

அவருடையபெற்றோர்களைஇலங்கையில்எமதுஊரில்சந்தித்துப்பேசியதைநினைவுபடுத்திஉரையாடத்தொடங்கியதும், எனக்குமற்றும்ஒருஅதிர்ச்சிகிடைத்தது. அதுஇன்பஅதிர்ச்சியல்ல!!

முதலில்வணக்கம்என்றுஇனியகுரலில்பேசியமீரா, பின்னர்” Uncle, very sorry,   I can’t  speak Tamil  fluently  “என்றார்.

“தேமதுரத்தமிழோசைஉலகமெலாம்பரவச்செய்வோம்.வீதிஎங்கும்தமிழ்முழக்கம்செய்வோம். யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழிபோல்இனிதாவதுஎங்கும்காணோம்”என்றெல்லாம்முழங்கியதமிழ்க்கவியின்ஒருவாரிசுக்குதமிழில்பேசமுடியவில்லையே…! என்றதுயரஅதிர்ச்சிவந்தாலும், சுதாரித்துக்கொண்டு, அதற்கானகாரணம்கேட்டேன்.

பிரேம்ஜி-ஞானசுந்தரன்.

தான்பெற்றோர்களுடன்அமெரிக்காவில்வசிப்பதாகவும், குழந்தைப்பருவத்திலேயேஅங்குசென்றுவிட்டதனால்தமிழில்சரளமாகப்பேசமுடியவில்லைஎன்றும்கவலையுடன்சொன்னார். புலம்பெயர்சூழல்அவரைஅவ்வாறுமாற்றியிருக்கிறது.

ஆயினும்,  புலம்பெயர்ந்தஈழத்தமிழர்கள்தாம்சென்றதேசங்கள்தோறும்பாரதியைநினைவுகூர்ந்தவாறுதான்பயணிக்கிறார்கள்.

பாரதியின்கொள்ளுப்பேத்திமீராவுக்குசரளமாகத்தமிழ்பேசமுடியாதுபோனாலும், பாரதியின்ஆங்கிலப்படைப்புகளைதொடர்ச்சியாகதாம்ஆய்வுசெய்துவருவதாகச்சொன்னார்.

எனதுதந்தைவழிஉறவினர்தொ.மு.சி. ரகுநாதன்தமிழ்நாடுதிருநெல்வேலியைச்சேர்ந்தவர்.  புதுமைப்பித்தனின்நெருங்கியநண்பர். பாரதிஇயல்ஆய்வாளர். மக்ஸிம்கோர்க்கியின்தாய்நாவல்உட்படபலசோவியத்இலக்கியங்களைதமிழுக்குமொழிபெயர்த்தவர். சாந்திஇலக்கியஇதழைநடத்தியவர்.

இலங்கைமுற்போக்குஎழுத்தாளர்சங்கம்1956ஆம்ஆண்டுடிசம்பர்மாதம்நாடளாவியரீதியில்பாரதிக்குவிழாஎடுத்தவேளையில்ரகுநாதனையும்அழைத்திருந்தது. அப்பொழுதுஎனக்குஐந்துவயதுதான்.

பாரதிபற்றிகேட்டுத்தெரிந்துகொள்ளும்ஆர்வம்இல்லாதஅந்தப்பருவத்தில்அவர்எங்களைத்தேடிநீர்கொழும்புக்குவந்தார்.

பின்னாளில்எமதுமுற்போக்குஎழுத்தாளர்சங்கத்தில்1973 இற்குப்பின்னர்நான்இணைந்திருந்தபோது, அவர்சொல்லிச்சென்றஒருகூற்றுபற்றிமூத்தஎழுத்தாளர்இளங்கீரனும்சங்கத்தின்செயலாளர்பிரேம்ஜிஞானசுந்தரனும்தெரிவித்தகருத்துக்களினால்எனக்குபாரதியிடத்தில்ஈர்ப்புமேலும்அதிகரித்தது.

” பாரதிபிறந்துவளர்ந்துமறைந்ததமிழ்நாட்டைவிடஇலங்கையில்தான்பாரதியின்தாக்கம்அதிகம். அதற்குபாரதியின்ஞானகுருயாழ்ப்பாணத்துச்சாமிமற்றும்விபுலானந்தஅடிகள்முதலானோரும்காரணம். அத்துடன்தமிழகத்தில்காங்கிரஸ்கட்சியும்திராவிடஇயக்கங்களும்பாரதிக்குரியஇடத்தைவழங்கத்தவறிவிட்டன. பாரதியைபார்ப்பனக்கவிஞன்என்றேதிராவிடஇயக்கங்கள்புறம்ஒதுக்கினாலும், அங்கிருந்தஇடதுசாரிகளும்முற்போக்காளர்களும்பாரதியின்புகழைதொடர்ந்துபரப்பினார்கள். ” என்றஅவரதுகருத்துஎன்னைபாரதியின்இலங்கைத்தாக்கம்பற்றிகருத்தூன்றவைத்தது.

தொ.மு.-சி.-ரகுநாதன்

இலக்கியப்பிரதிகள்எழுதத்தொடங்கியதும்எனதுதாத்தாஉறவுமுறையானதமிழகத்தின்மூத்தபடைப்பாளிரகுநாதனுடன்கடிதத்தொடர்புகள்மேற்கொண்டேன்.

எமதுசங்கம், நாடளாவியரீதியில்பாரதிநூற்றாண்டுகொண்டாட்டங்கள்நடத்தியபோது, அந்தக்குழுவில்இணைந்திருந்தேன்.  ரகுநாதன்1983 ஆம்ஆண்டுஎமதுசங்கத்தின்அழைப்பைஏற்றுமீண்டும்அந்தநூற்றாண்டுகாலத்தில்வந்திருந்தார். அவருடன்,  பேராசிரியர்ராமகிருஷ்ணன்,படைப்பாளிராஜம்கிருஷ்ணன்ஆகியோரும்வந்தனர். இவர்களுடன்இணைந்துஇலங்கையில்பலஇடங்களுக்கும்பயணித்து,  இலங்கைஇதழ்களிலும்தமிழ்நாடுதாமரைஇதழிலும்பதிவுகளைஎழுதியிருக்கின்றேன்.

இலங்கையில்பாரதியின்தாக்கம்குறித்துமேலும்ஆராய்வதற்குகுறிப்பிட்டபாரதிநூற்றாண்டுகாலப்பகுதிவழிவகுத்தது. தகவல்கள்தரவுகள்,நூல்கள், பிரசுரங்கள்சேகரித்தேன்.

துர்ப்பாக்கியவசமாக1983நடுப்பகுதியில்வன்செயல்வந்துஇடப்பெயர்வுஅவதிக்குள்சிக்கியதால் ,அவற்றில்சிலவற்றைஇழந்தேன். எனினும்பாரதிஎனக்குள்தாகமாகவேதொடர்ந்துஊற்றெடுக்கிறார். இலங்கையிலிருக்கும்போது,பாரதிநூற்றாண்டுநிறைவுற்றதும்இலங்கையில்பாரதிதொடரைஎழுதத்தொடங்கினேன். அதன்முதல்அங்கங்கள்சிலவற்றை1984இல்தொ.மு. சி. ரகுநாதனும்பார்த்தார். எழுதிமுடித்துதரச்சொன்னார். மேலும்தரவுகள்தகவல்கள்தேவைப்பட்டதனால்,தேடலில்காலம்விரையமாகியது. எதிர்பாராதவகையில்1987இல்அவுஸ்திரேலியாவுக்குபுலம்பெயரநேர்ந்தது.

இங்குவந்தபின்னர்பாரதியின்கவிதைவரிகளையேஆதாரமாகக்கொண்டு, இலங்கையில்நீடித்தஉள்நாட்டுப்போரில்பாதிக்கப்பட்டஏழைத்தமிழ்மாணவர்களின்கல்விவளர்ச்சிக்குஉதவும்வகையில்இலங்கைமாணவர்கல்விநிதியம்என்றதன்னார்வத்தொண்டுநிறுவனத்தை1988இல்தொடக்கினேன்.

அத்துடன்அவுஸ்திரேலியத்தமிழர்ஒன்றியம்என்றகலை, இலக்கியஅமைப்பையும்நண்பர்களுடன்இணைந்துஆரம்பித்து,முதல்தடவையாகஅவுஸ்திரேலியாவில்மகாகவிபாரதிவிழாவையும்1990 ஆம்ஆண்டுநடத்துவதற்குமுன்னின்றுஉழைத்தேன்.

இவ்வாறுஇரண்டுஅமைப்புகளில்எனதுநேரத்தையும்உழைப்பையும்செலவிட்டுக்கொண்டிருந்தமையால், இலங்கையில்பாரதிஆய்வுப்பணிகள்மேலும்தாமதமாகின. காலம்கடந்துகொண்டிருக்கையில்எனதுமனைவிமாலதி, இந்தஆய்வைஎழுதிமுடிக்குமாறுஎன்னைத்தூண்டிக்கொண்டிருந்தார். அவர்ஒருதமிழாசிரியையாகஇலங்கையில்பணியாற்றியவர். இலங்கையில்பாரதிஆய்வுமாணவர்களுக்குபெரிதும்உதவும்என்பதனால்எழுதிமுடிக்குமாறுவலியுறுத்திவந்தார்.

மீண்டும்விட்டஇடத்திலிருந்துதொடங்கினேன்.  பாரதியின்ஞானகுருயாழ்ப்பாணத்துச்சாமிஅருளம்பலம்( 1878 – 1942)அவர்கள்தோன்றியஅதேமண்ணிலிருந்துவெளிவரத்தொடங்கியகாலைக்கதிரில்நாற்பதுவாரங்கள்வெளியாகியஇந்தத்தொடர், பின்னர்அவுஸ்திரேலியாதமிழ்முரசுஇணையஇதழிலும்வெளிவந்தது.

இளங்கீரன்.

காலைக்கதிரில்இந்தத்தொடர்வெளியாவதற்குஆவனசெய்தஇலக்கியநண்பரும்பத்திரிகையாளருமானதெய்வீகன்அவர்களுக்கும், இந்தத்தொடரைஏற்றுவெளியிட்டகாலைக்கதிர்ஆசிரியபீடத்தின்மூத்தபத்திரிகையாளர்நண்பர்வித்தியாதரன்அவர்களுக்கும்காலைக்கதிர்பத்திரிகைக்கும்மனமார்ந்தநன்றியைத்தெரிவிக்கின்றேன்.

அவுஸ்திரேலியாவில்வதியும்அன்பர்கள்சிலரதுவேண்டுகோளைஏற்றுஇலங்கையில்பாரதிதொடர்சிட்னியிலிருந்துவெளியாகும்தமிழ்முரசுஇணையஇதழிலும்வெளிவந்தது. அவுஸ்திரேலியாதமிழ்முரசுஇணையஇதழுக்கும்ஆசிரியர்குழுவைச்சேர்ந்தஇலக்கியநண்பர்கள்கருணாசலதேவா, செ. பாஸ்கரன்ஆகியோருக்கும், அவ்வப்போதுதமதுகருத்துக்களையும்ஆலோசனைகளையும்தெரிவித்தசிட்னியில்வதியும்மதிப்பார்ந்தசகோதரிதிருமதிபராசக்திசுந்தரலிங்கம்மற்றும்தகைமைசார்பேராசிரியர்கள்மௌனகுரு, நுஃமான்,செ.யோகராசா, ஞானம்ஆசிரியர்தி. ஞானசேகரன், ஜீவநதிஆசிரியர்கலாமணிபரணீதரன்மற்றும்செல்விநீலாம்பிகைகந்தப்பு, செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்ஆகியோருக்கும்எனதுமனமார்ந்தநன்றியைத்தெரிவிக்கின்றேன்.

இந்தஆய்வினைஎழுதுவதற்குதூண்டுகோலாகவிருந்துஆலோசனைகளும்வழங்கியமனைவிமாலதிக்கும்இச்சந்தர்ப்பத்தில்நன்றிதெரிவிக்கின்றேன்.

பாரதிபெருங்கடல்.எட்டயபுரத்தில்தோன்றிதமிழகத்தையும்இந்தியாவையும்கடந்துஈழத்திற்கும்வந்து, சிந்தனைகளால்உலகெங்கும்பரவி, ஆழமும்விரிவும்கொண்டபெருங்கடல்.

எனதுகுழந்தைப்பருவத்தில்பாரதியின்பாடல்கள்மூலம்பாரதியைஅறிமுகப்படுத்தியவர் -எனக்கு1954 ஆம்ஆண்டுவிஜயதசமியின்போதுஏடுதுவக்கிவித்தியாரம்பம்செய்வித்தவர்பண்டிதர் க. மயில்வாகனன்அவர்கள்.

அன்னார், 1919ஆம்ஆண்டுஇலங்கையின்வடபுலத்தில்சித்தங்கேணியில்பிறந்து2008ஆம்ஆண்டுமறைந்தார்.

என்னைஒருமாணவனாகப்பார்க்காமல்,  மகனாகநேசித்தபெருந்தகையானபண்டிதர்அய்யாவுக்கு2019ஆம்ஆண்டுஜனவரிமாதம்நூற்றாண்டுதொடங்குகிறது.

அவரின்நூற்றாண்டில்இலங்கையில்பாரதிநூலைஅன்னாருக்கேசமர்ப்பிக்கின்றேன். இந்தஆய்வுத்தொடர்வெளியானகாலத்தில்இதனைப்படித்துமின்னஞ்சல்கள், தொலைபேசிஊடாககருத்துக்களைபகிர்ந்துகொண்டஅன்பார்ந்தவாசகர்களுக்கும்பாரதிபக்தர்களுக்கும்இலங்கையில்பாரதிநூலுக்குமுகப்போவியம்வரைந்துள்ளஓவியர்  ( அமரர் ) மொறாயஸ்அவர்களுக்கும், இந்நூலைபதிப்பித்துதரும்நீர்கொழும்புசாந்திஅச்சகத்தினருக்கும்அதன்ஊழியர்களுக்கும்எனதுமனமார்ந்தநன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்புடன்

முருகபூபதி

letchumananm@gmail.com

Share:

Author: theneeweb