கிளிநொச்சி வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள் கோணாவில் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது

கிளிநொச்சி வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள் கோணாவில் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது

கிளிநொச்சி கல்வி வலயத்தின் வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள் இன்று கோணாவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில்  கனடா ஈகை நிறுவனத்தின் அணுசரனையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ் பல்கலைகழ மாணவர்கள் விசேடமாக வருகைதந்து கோணாவில் பாடசாலை  மாணவர்களுடன்’ விளையாட்டு உள்ளிட்ட  நிகழ்வுகளில் ஈடுப்பட்டனர்.

மாணவச் சிறார்களை மகிழ்விக்கும் வகையில்  பல்கலைகழக மாணவர்கள் ஆடியும் பாடியும் மாணவர்களுடன் நிகழ்வுகளில் ஈடுப்பட்டனனர். காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் இதயசிவதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் கி.கமலராஜன், கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகௌரிபாலா  பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர்கள் என பலர் கலந்துகொண்டனர்52

Share:

Author: theneeweb