நிதி மோசடி செய்த பிரதேச சபை உறுப்பினர் பணி இடைநிறுத்தம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் நிதி மோசடி செய்துள்ளார் என்று தெரிவித்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த மோசடியில் ஈடுப்பட்ட பணியாளருக்கு எதிராக கரைச்சி பிரதேச சபையின் செயலாளரினால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அப் பணியாளர் கைது செய்யப்பட்டு பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுப்பட்ட பணியாளர் அரசியவாதி ஒருவரின் நெருங்கிய உறவினராவார். எனவும் கரைச்சி பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் குறித்த பணியாளர் சந்தை வியாபாரிகளிடம் பெற்ற நில வாடகை, விற்பனை வரி, உள்ளிட்ட நிதியினையே மோசடி செய்துள்ளார். இரண்டு இலட்சத்து 28 ஆயிரம் ரூபா நிதியை மோசடி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிதி மோசடி தொடர்பாக கரைச்சி பிரதேச சபை நிர்வாக ரீதியான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு, பொலீஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.5

Share:

Author: theneeweb