மொட்டு சின்னத்தை தவிர வேறு சின்னங்களுக்கு சட்ட ரீதியான தடைகள் காணப்படுகின்றது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மொட்டு சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் போட்டியிடுவதில் சட்டரீதியான தடைகள் காணப்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெப்பிலியான சுமேத்திர தேவி பிரிவேனாவில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைய வேண்டும் எனவும், நாட்டுக்கு ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் எனவும் இதன் போது பிரார்தனை செய்யப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவரும் பங்கேற்றிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ தவிர்ந்த மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படும் என எதிர்பார்பதாகவும் கூறினார்.

Share:

Author: theneeweb