ஜனாதிபதி தேர்தலுக்கு 450 கோடி ரூபாய் செலவு? – முறைப்பாடுகளை தெரிவிக்க மத்திய நிலையம்

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு 450 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளருடனான சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்து தொர்பான பிரகடனத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவர் என நீதி மன்றம் தீர்மானிக்குமாயின் அவரது பெயரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். பதாதை , பெனர்களை அகற்றுவது தொடர்பாக தாம் கட்சி மற்றும் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில் இந்த மத்திய நிலையத்திற்கு தெரிவிக்கப்படும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரையில் அது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

தொலைபேசி, தொலை நகல், மின் அஞ்சல், முகப்புத்தகம் ஆகியவற்றின் ஊடாகவும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். முறைப்பாடுகளை சமர்ப்பிப்பிப்பது தொடர்பான விபரங்கள் வருமாறு:

தொலைபேசி இலக்கம் 011-2868212

011-2828560

011-2868217

தொலை நகல் 011-2868529

Fax 011-2868526

Viber/ WhatsApp 0719160000

மின் அஞ்சல் – complaint.pre2019@elections.gov.lk

முகப்புத்தகம் – Election Commission of Sri Lanka

– Tell Commission of Sri Lanka

Share:

Author: theneeweb