பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்- கோட்டாபய ராஜபக்ஷ

தேர்தலின் ஊடாக தன்னை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் இன்று பொய்யான குற்றச்சாட்டுக்களை தன் மீது சுமத்தி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று காலை அலுத் நுவர விகாரையில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்குபற்றியதன் பின்னர் அங்கிருந்த மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb